இப்படியும் லூஸா இருப்பேனா...: புலம்பித் தள்ளும் நடிகை
சென்னை: இரண்டு சூப்பர் ஹிட் படங்களில் நடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டதை நினைத்து இளம் நடிகை ஒருவர் புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் கடவுளின் பெயர் கொண்ட அந்த நடிகை. ஹெட் நடிகர், முத்த நாயகன் படங்களில் நடித்துள்ளார்.
வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார் அவர்.

புதுமுகம்
தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்டான ஒரு காதல் படத்தில் நடிக்க முதலில் இவரை தான் அணுகியுள்ளார்கள். புதுமுக இயக்குனர், லிப் டூ லிப் காட்சி ஆகியவற்றால் அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் நடிகை.

முடியாது
புதுமுக இயக்குனரின் நீர்வீழ்ச்சி படத்தில் நடிக்கும் வாய்ப்பும் அம்மணிக்கு வந்தது. புதுமுக இயக்குனர், சுமாரான கதை என்று அந்த படத்திலும் நடிக்க மறுத்துவிட்டார்.

ஹிட்
புதுமுகம் புதுமுகம் என்று நினைத்து அவர் நடிக்க மறுத்த இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்டாகியுள்ளன. அதில் நடித்த ஹீரோயின்களுக்கும் நல்ல பெயர் கிடைத்துள்ளது.

நடிகை
இரண்டு சூப்பர் ஹிட் படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்க மறுத்ததை நினைத்து நடிகை தற்போது புலம்பித் தள்ளுகிறாராம். அந்த படங்களில் நடித்திருந்தால் இந்நேரம் நான் டாப் நடிகையாகியிருப்பேனே என்று புலம்புகிறாராம்.


Click it and Unblock the Notifications











