தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போடும் நடிகை
Recommended Video

சென்னை: இளம் நடிகை ஒருவருக்கு எதிரி வெளியில் இல்லை, அவரே தான்.
நடிப்புத் திறமையால் முன்னுக்கு வந்தவர் அந்த நடிகை. முன்னணி நடிகை அந்தஸ்தை பெறாவிட்டாலும் ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்த நபராகிவிட்டார்.
ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தால் நச்சென்று நடித்து பெயர் வாங்கிவிடுவார்.

வம்பு
நடிகை நல்ல பெயர் எடுத்த நிலையில் மேடையில் பேசும் போதும், பேட்டிகள் கொடுக்கும்போதும் தேவையில்லாமல் யாரையாவது குத்திக் காட்டி பேசி வருகிறார். மேடை சர்ச்சையை அடுத்து தற்போது பேட்டி ஒன்றிலும் சக நடிகைகளை குத்திக் காட்டியதாக புகார் எழுந்துள்ளது.

சிவப்பு
நடிகைகள் சிலர் சிவப்பாக மாற ஆசைப்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்துள்ளார்கள். இந்நிலையில் இந்த நடிகையோ நான் மாநிறமாக இருப்பதில் பெருமை அடைகிறேன். சிவப்பாக மாற சிகிச்சை எடுக்குமாறு என்னிடம் கூறினார்கள். நான் மறுத்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார். அவரின் பேச்சை கேட்டு சிகிச்சை எடுத்து சிவப்பாக மாறிய அந்த பெரிய நடிகைக்கு செம எரிச்சலாகியிருக்கும்.

காதல் முறிவு
ரொம்ப காலம் ஒருவரை காதலித்துவிட்டு அவரை பிரிந்த கையோடு இன்னொருவரை எப்படித் தான் காதலிக்கிறார்களோ என்று நடிகை பேட்டி அளித்துள்ளார். அவர் யாரை சொல்கிறார் என்பது எங்களுக்கு புரிந்துவிட்டது என்று நெட்டிசன்ஸ் தெரிவித்துள்ளார்கள்.

சினிமா
நான் ஒன்றும் ஒரே நாள் இரவில் பெரிய ஆளாகவில்லை. மேலும் காபி கடையில் என்னை பார்த்துவிட்டு வாய்ப்புகள் வரவில்லை என்று நடிகை கூறியிருப்பது சிலரை எரிச்சல் அடைய வைத்துள்ளது. எடுத்த நல்ல பெயரை இப்படி குத்திக்காட்டி பேசியே கெடுத்துக் கொள்வார் போன்று என்று கோடம்பாக்கத்தில் பேசுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











