அடேங்கப்பா அட்ஜஸ்ட் செய்ததுடன் இத்தனையும் செய்து தான் நடிகைக்கு பட வாய்ப்பு கிடைத்ததா?
சென்னை: முட்டைக் கண்ணழகி நடிகைக்கு வாரிசு நடிகர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவ்வளவு எளிதில் கிடைக்கவில்லையாம்.
தமிழ் மற்றும் தெலுங்கு உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் அந்த முட்டை கண்ணழகி. அதிலும் குறிப்பாக தெலுங்கு திரையுலகில் ஹீரோக்களின் மனம் கவர்ந்தவர் என்ற பெயர் எடுத்துள்ளார்.
காரணம் ஹீரோக்கள் படப்பிடிப்புக்கு எவ்வளவு நேரம் தாமதமாக வந்தாலும் முகம் சுளிக்காமல் நடித்துக் கொடுப்பார்.

வாரிசு நடிகர்
தமிழிலும் லீடர், கோட் நடிகர், சுள்ளான் என்று முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தற்போது அவர் வாரிசு நடிகருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். முன்பே வாரிசு நடிகரின் படத்தில் நடிக்க வேண்டியது. ஆனால் அது நடக்காமல் போனது. இந்நிலையில் தான் வாரிசு நடிகருக்கு ஜோடியாகியுள்ளார்.

சம்பளம்
வாரிசு நடிகரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு நடிகைக்கு எளிதில் கிடைக்கவில்லையாம். வாரிசு நடிகருடன் ஜோடி சேர தூது மேல் தூது விட்டாராம். பல முயற்சிகள் செய்தாராம். தெரிந்தவர்களை வைத்து சிபாரிசு செய்யச் சொன்னாராம். மேலும் சம்பளத்தை கூட குறைத்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தாராம். இவ்வளவு செய்த பிறகே அவருக்கு அந்த பட வாய்ப்பு கிடைத்துள்ளது.

எதற்கு?
அந்த வாரிசு நடிகர் படத்தில் நடிக்க முட்டை கண்ணழகி நடிகை எதற்கு இவ்வளவு இறங்கி வர வேண்டும் என்ற பேச்சு கிளம்பியுள்ளது. முட்டை கண்ணழகி நடிக்க வந்து பல ஆண்டுகளாகிவிட்டாலும் அவருக்கு இன்னும் சரியாக நடிக்கத் தெரியவில்லை என்ற விமர்சனம் எழுந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

2 படங்கள்
அம்மணி கைவசம் இரண்டு தெலுங்கு படங்கள் உள்ளன. தெலுங்கு திரையுலகை பொருத்த வரை இவர் தான் சமத்து நடிகை. அதனால் ஹீரோக்களே அவரை பரிந்துரை செய்கிறார்கள். அங்கு ஒரு வாரிசு நடிகர் அம்மணிக்கு கூடுதலாக பரிந்துரை செய்கிறாராம். அம்மணி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு ரீமேக் படத்தில் நடித்துள்ளார். அது ரிலீஸானால் தான் அவரால் தனித்து படத்தை தாங்க முடியுமா என்பது தெரிய வரும்.


Click it and Unblock the Notifications










