ஜோதிடர் பேச்சை கேட்டுக் கொண்டு பெற்றோரை கடுப்பேற்றும் நடிகை
சென்னை: இளம் நடிகை ஒருவர் ஜோதிடர் சொன்ன பேச்சை கேட்டு மகிழ்ச்சியில் உள்ளாராம்.
இளம் நடிகை ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க அவரின் பெற்றோர் ஆசைப்படுகிறார்கள். மகளுக்கு ஏற்ற மாப்பிள்ளையை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் நடிகை ஜோதிடர் ஒருவரை பார்த்து பேசியுள்ளார். அவரோ, உங்களுக்கு நம்பர் ஒன் நடிகையாகும் யோகம் உள்ளது. அதனால் அவசரப்பட்டு திருமணம் செய்ய வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
ஜோதிடர் பேச்சைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த நடிகை பெற்றோரின் பேச்சை கேட்க மறுக்கிறாராம். ஜோதிடர் சொல்லிவிட்டார், நான் கண்டிப்பாக நம்பர் ஒன் இடத்தை பிடிப்பேன் என்கிறாராம்.
உழைப்பை நம்பாமல், ஜோதிடத்தை நம்பி இப்படி பேசுகிறாரே என்று அவருக்கு நெருக்கமானவர்கள் நொந்து கொள்கிறார்களாம்.
Comments


Click it and Unblock the Notifications