»   »  கட்டிக்க ஆசைப்படும் நடிகை, நைசாக நழுவும் ஹீரோ

கட்டிக்க ஆசைப்படும் நடிகை, நைசாக நழுவும் ஹீரோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னணி நடிகை ஒருவர் சக நடிகர் மீது ஆசை வைத்துள்ளபோதிலும் அவர் அதை கண்டுகொள்ளவில்லையாம்.

ஒரு பட வாய்ப்பை கொடுத்தால் கதாபாத்திரமாகவே மாறி வாழ்ந்துவிடுவார் என்று பெயர் எடுத்துள்ளவர் அந்த நடிகை. ஹீரோக்களுக்கு இணையாக நடிப்பில், ஆக்ஷன் காட்சிகளில் கூட மிரட்டுவார்.

நடிப்பில் அசத்துவதால் அவர் கோடியில் சம்பளம் கேட்டும் தயாரிப்பாளர்கள் யாரும் முகம் சுளிக்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை. இப்படி சினிமா கெரியர் சூப்பராக சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நடிகைக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார்கள் வீட்டில். இதை நடிகை தனக்கு நெருக்கமான ஹீரோவிடம் கூறியுள்ளார்.

நானே கட்டிக்கிறேன் என்று ஹீரோ கூற மாட்டாரா என்ற எதிர்பார்ப்பில் தெரிவித்த நடிகைக்கு ஏமாற்றமே மிச்சமாம். ஹீரோவோ, அப்பா அம்மா பேச்சை கேட்டு நடந்துக்கோம்மா என்று அறிவுரை கூறினாராம். இத்தனைக்கும் அவர்கள் இருவரும் காதலிப்பதாக வேறு ஆளாளுக்கு பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A leading actress is expecting a leading hero to marry her but he is not showing any interest in her.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil