ஆசைப்படலாம் ஆனால் இந்த வாரிசு நடிகை பேராசைப்படுகிறாரே

By Siva

சென்னை: ஆசைப் படலாம் தப்பு இல்லை. ஆனால் இந்த நடிகையோ பேராசைப்படுகிறார்.

வாரிசு நடிகை ஒருவர் கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் பலருடன் நடித்துவிட்டார். அம்மணி சிரித்து சிரித்து தான் படத்தை ஓட்டுகிறார், நடிப்பில் பெரிதாக ஒன்றும் இல்லை என்ற விமர்சனம் உள்ளது.

இடையே அவர் நடித்த ஒரு படத்தில் அவரின் நடிப்பை பார்த்து பலரும் மிரண்டு போனார்கள். ஆனால் அதன் பிறகு அவர் மீண்டும் சிரிப்பை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்துவதாக கூறப்படுகிறது.

நம்பர் நடிகை

நம்பர் நடிகை

அம்மணிக்கு நம்பர் நடிகையின் இடத்தை பிடிக்க வேண்டும் என்ற ஆசை. அதை அவரே பல முறை தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளார். நம்பர் நடிகைக்கு நடிக்க வரும், இவருக்கு வராது. அப்படி இருக்கும் போது நம்பர் நடிகையை பார்த்து பொறாமைப்படுகிறார், அவர் இடத்தை பிடிக்க ஆசைப்படுகிறார்.

சம்பளம்

சம்பளம்

நம்பர் நடிகை நடித்த படங்கள் சூப்பர் ஹிட்டாவதால் அவர் கேட்கும் சம்பளத்தை தயாரிப்பாளர்கள் கொடுக்கிறார்கள். இந்நிலையில் வாரிசு நடிகைக்கு நம்பர் நடிகை வாங்கும் அதே சம்பளம் வேண்டுமாம். தான் நடித்துள்ள புதுப்படம் வெளியான கையோடு சம்பளத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளாராம். இத்தனைக்கும் அந்த புதிய படத்தில் அம்மணிக்கு பெரிதாக வேலை இல்லை.

ஆசை

ஆசை

நம்பர் நடிகை போன்று ஆக வேண்டும் என்ற ஆசை மட்டும் அல்ல அவரை போன்றே கோட் நடிகருடன் சேர்ந்து நடிக்கவும் துடிக்கிறார் வாரிசு நடிகை. கோட் நடிகருடன் ஜோடி போட ஏற்கனவே பலர் முயற்சி செய்து வருகிறார்கள். இதில் வாரிசு நடிகைக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அங்கிள்ஸ்

அங்கிள்ஸ்

வாரிசு நடிகை வயதில் சிறியவர் என்றாலும் அப்பா, அங்கிள் வயது ஹீரோக்களுடன் நடிக்கிறார். அங்கிள் ஹீரோஸுக்கு அவர் அவ்வளவு பொருத்தமாக உள்ளார். ஒரு படத்தில் அப்பா வயது சீனியர் ஹீரோவுக்கு அவ்வளவு அம்சமான ஜோடியாக இருந்தார். நடிகரை விட வயதில் மிகவும் சின்னவர் என்றே தெரியவில்லை. அதனால் தானோ என்னவோ, இளம் ஹீரோக்கள் பார்வை அம்மணி மீது படவே இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X