நடிகரை நம்பி நாசமா போன வாழ்க்கை.. வாழ்வு கொடுத்த தயாரிப்பாளர்..கேரவனுக்குள் கதறி அழுத நடிகை..!
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் அந்த நான்கு எழுத்து நடிகை, வாழ்வு கொடுத்த தயாரிப்பாளரால் மீண்டும் சிக்கலில் சிக்கி உள்ளார்.
மாநிற தேகம் கொண்ட அந்த நடிகை தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து கொடி கட்டிபறந்து வருகிறார். இவர் எந்த அளவுக்கு பிரபலமாக இருக்கிறாரோ அந்த அளவுக்கு சர்ச்சையிலும் இவரது பெயர் அடிபட்டுக்கொண்டே இருக்கும்.

கவர்ச்சியாக நடித்தார்: முன்னணி நடிகர்களுடன் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த நான்கு எழுந்து நடிகைக்கு திடீரென பட குறைந்து போக கவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்து, ஒரு சில படங்களில் ஓவராக கவர்ச்சி காட்டி நடித்தார். அப்போது, வளர்ந்து வரும் நடிகர் ஒருவரின் படத்தில் சேர்ந்து நடித்த போது அவருடன் காதல் ஏற்பட்டு, அது திருமணம் வரை சென்றது. ஆனால், திருமணத்திற்கு நடிகையின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து குடும்பத்தை விட்டு பிரிந்து, யாருக்கும் தெரியாமல் இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர்.
சினிமாவை விட்டு விலகினார்: நம்பி வந்த காதலனோ, சினிமாவில் நடிக்கக்கூடாது, கவர்ச்சியாக நடிக்கக்கூடாது என அடுத்தடுத்து பிரச்சனை கொடுத்ததால், என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்த அந்த நான்கு எழுத்து நடிகை ஒரு கட்டத்தில் சினமாவே வேண்டாம் என்று சினிமாவை விட்டே விலகிவிட்டார். இதையடுத்து, தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவரின் உதவியுடன் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்.
வெப் தொடர்களில்: நான்கு எழுத்து நடிகைக்கு முன்பைவிட படவாய்ப்பு இல்லை என்றாலும், தயாரிப்பாளரின் தயவால் வெப் தொடர்களில் நடித்து வருகிறார். படங்களில் கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த நான்கு எழுத்து நடிகை வெப் தொடரில் வரம்பு மீறி கவர்ச்சிகாட்டி வருகிறார். அண்மையில் வெளியான ஒரு வெப் தொடரில் படுக்கை அறைக் காட்சியில் தாராளமாக கவர்ச்சி காட்டி நடித்திருந்தார்.
கேரவனில் கதறும் நடிகை: தற்போது கணிசமான படங்களில் நடித்து வரும் அந்த நான்கு எழுத்து நடிகைக்கு, வாழ்வு கொடுத்த தயாரிப்பாளரும் தற்போது குடைச்சல் கொடுப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார். தயாரிப்பாளரோ தெலுங்கு சினிமாவில் வெயிட்டான கை என்பதால், எதுவுமே சொல்ல முடியாமல் கேரவனில் கதறி கதறி அழுது வருவதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











