எல்லாமே வந்துடும்னு சொன்னீங்களே பாஸ்.. உச்சகட்ட பயத்தில் தமாஸ் நடிகர்.. அப்போ அதுவும் போச்சா?
சென்னை: இந்நேரம் டிக்கெட் புக்கிங் ஆரம்பித்து படத்தை முன்கூட்டியே வெளியிட்டு இருக்கலாம். ஆனால், கடைசி வரை நம்பிக்கொண்டிருந்த டீமுக்கும் பட்டை நாமத்தை பெரிய பாஸ் போட்டு விட்டார் என்கின்றனர். இதனால், தமாஸ் நடிகரும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாக பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.
கண்டிப்பாக நமக்கு எந்தவொரு சிக்கலும் இல்லை எல்லாமே பாஸ் நடிகரின் படத்துக்குத்தான் நீங்க கவலைப்படாமல் டூர் அடிங்க என மேலிடத்தில் இருந்து வந்த வாக்குறுதியை நம்பி படக்குழு படு ஜோராக டூர் அடித்து வந்த நிலையில், தற்போது உள்ளதும் போச்சே என பீதியில் இருப்பதாக பேச்சுக்கள் கசியத் தொடங்கியுள்ளன.

கடைசி வரை நம்ப வைத்து கழுத்தை அறுத்துட்டாங்களே என்றும் உங்க கேமில் நான் தான் ஸ்கேப் கோட்டா என தமாஸ் நடிகர் ரொம்பவே தமாஸ் செய்து விட்டார் எனக் கூறுகின்றனர்.
போட்ட கணக்கு எல்லாம் தப்பாகிடுச்சே: மாஸ் நடிகருக்கு செக் வைக்கவே தமாஸ் நடிகருக்கு பக்க பலமாக அந்த பெரிய பார்ட்டி இருந்தது என்றும் மாஸ் நடிகருக்கு வேற சிக்கல் வந்து மொத்த சோலியையும் முடித்து விட்ட நிலையில், தமாஸ் நடிகரை பெரிய பார்ட்டி அம்போ என விட்டு விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன. எப்படியும் நம்ம படத்துக்கு பிரச்னை வராது என நம்பிக் கொண்டிருந்த நடிகருக்கு இப்போதான் சீரியஸ்னஸ் புரிய ஆரம்பித்துள்ளதாம்.
வச்சான் பாரு ஆப்பு: ஜாலியாக எல்லாமே சுமூகமாக முடிந்துவிடும் என தமாஸ் நடிகர் படத்துக்கு க்ரீன் சிக்னல் கொடுத்தது போல கொடுத்துவிட்டு தற்போது கடைசி நேரத்தில் பெரிய பாஸ் போட்ட உத்தரவு காரணமாக ஏகப்பட்ட குடைச்சல்களை கிளப்பி இந்த படத்தையும் பண்டிகை கொண்டாட்டத்தில் வரவிடாமல் செய்துவிடும் முடிவுக்கு வந்துவிட்டதாக திடுக்கிட வைக்கின்றனர்.
தமாஸ் நடிகருக்கு தலைவலி: எல்லாமே மேலே இருக்குறவன் பார்த்துப்பான் என கடைசி வரை கண்டுக்கொள்ளாமல் அமைதியாக இருந்த தமாஸ் நடிகருக்கு கடைசி நேரத்தில் தலைவலியை கொடுத்துள்ளதாகவும் தனக்கு பிரச்னை வராது என நினைத்த டைரக்டருக்கு செம டென்ஷன் ஆகிவிட்டதாகவும் கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.


Click it and Unblock the Notifications











