அந்த நடிகைக்கும் சீக்கிரமே திருமணம் நடத்தி வைக்கப் போகிறாரா மாஸ் நடிகர்?.. தீயாக பரவும் தகவல்!

By Staff

சென்னை: எந்த நடிகையுடன் மாஸ் நடிகரை அதிகம் கோர்த்துவிட்டு கிசுகிசுக்களை கட்டவிழ்த்து விட்டு வந்தார்களோ அந்த நடிகைக்கு திருமணம் நடக்க காரணமே மாஸ் நடிகர் தான் என்கின்றனர். இந்நிலையில், இன்னொரு பிரபல நடிகைக்கும் மாஸ் நடிகர் தலைமையில் சீக்கிரமே திருமணம் நடைபெறப் போவதாக சில கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

சமீப காலமாக மாஸ் நடிகர் குடும்பத்தினருடன் வெளியே எங்கேயும் தென்படாமல் இருந்து வரும் நிலையில், அவருக்கு எதிராக ஏகப்பட்ட அவதூறு கருத்துக்கள் மற்றும் நடிகைகளுடன் தொடர்புபடுத்தி கிசுகிசுக்கள் கிளம்பி வருகின்றன.

gossip kollywood actors gossip

அதிலும், குறிப்பாக ஒரு பிரபல நடிகையுடன் நடிகரை கோர்த்துவிட்டு பலரும் பேசி வந்தாலும், மற்ற விஷயங்களுக்கு எல்லாம் அடுத்த நொடியே ரியாக்ட் செய்து வரும் அந்த நடிகை இந்த விவகாரத்தில் மட்டுமே வாயே திறக்காமல் அமைதி காத்து வருகிறார்.

கிசு கிசு நாயகன்: தமிழ் சினிமாவில் இந்த வயதிலும் இளம் நடிகர்களை விட அதிக கிசுகிசுக்களை அந்த மாஸ் நடிகர் சந்தித்து வரக் காரணமே அவருக்கு எதிரான அரசியல் சூழ்ச்சிகள் தான் காரணம் என்கின்றனர். பல முன்னணி நடிகைகளுடன் நடிகரை கோர்த்து விட்டு ஏகப்பட்ட வதந்திகளை குறிப்பிட்ட ஒரு டீம் செய்து வருவதாக கூறுகின்றனர். ஆனால், அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஒவ்வொரு விஷயத்துக்கும் எப்போது எப்படி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதை மாஸ் நடிகர் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார் என்கின்றனர்.

நடிகைக்கு திருமணம்: சமீபத்தில் நடிகருடன் சேர்த்து படு மோசமாக ஒன்றுமே தெரியாமல் பேச்சுக்கள் அடிபட்டு வந்த நிலையில், அந்த நடிகை திடீரென தனது திருமணத்தை அறிவித்து அதிலும் அந்த ஹீரோவையே திருமணத்துக்கு அழைத்து அவரது முன்னிலையிலேயே திருமணம் செய்துக் கொண்டதால் அந்த நடிகையை பற்றி எதிர் தரப்பு பேசிய பேச்செல்லாம் பொய்யாக மாறிவிட்டது என்கின்றனர். அடுத்து இன்னொரு நடிகையுடன் தொடர்புபடுத்தி கிசுகிசுக்கள் எல்லை மீறி சென்றுக் கொண்டிருக்கும் நிலையில், நடிகர் திடீரென எடுத்திருக்கும் முடிவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தப் போவதாக கூறுகின்றனர்.

அந்த நடிகைக்கும் மாப்பிள்ளை ரெடியா?: நடிகர் தன்னுடைய லட்சியத்தை எட்டுவதற்கு தடையாக இருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் சரியான நேரத்தில் முடித்துவிட்டு ஸ்கோர் செய்யப் போகிறார் என சில பேச்சுக்கள் தற்போது கோலிவுட்டில் புகையத் தொடங்கியுள்ளது. பிரபல நடிகை ஒருவருக்கும் மாப்பிள்ளை ரெடி என்றும் சீக்கிரமே அந்த நடிகையின் திருமணமும் மாஸ் நடிகரின் தலைமையில் நடைபெறப் போவதாகவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X