ஒரு கூடு - இரு கூட்டு!

By Staff
Click here for more images
கோலிவுட்டின் லேட்டஸ்ட் ஹாட் கிசுகிசு, ஆர்யா, நிலா, லட்சுமி ராய் மற்றும் அவரது தோழர் பற்றியதுதான்.

ஹாலிவுட் ரேஞ்சுக்கு தமிழ் சினிமாவை உயர்த்துவது குறித்து கோலிவுட்டில் சிலர் மாய்ந்து மாய்ந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சிலரோ, பாலிவுட் ரேஞ்சுக்கு சில வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் சில நடிகர், நடிகைகள் குறித்து வரும் வதந்திகள் படு கிளுகிளுப்பாக உள்ளது, திகிலடிக்கவும் வைக்கிறது.

நடிகர், நடிகைகள் குறித்த கிசுகிசுக்களுக்குப் பஞ்சமே இருப்பதில்லை. ஆனால் தற்போது உலா வந்து கொண்டிருக்கும் ஒரு கிசுகிசு படு குஜாலாக இருக்கிறது.

நான் கடவுள் நாயகனும், மருதமலை இளவரசியும் படு நட்பாக இருக்கிறார்கள் என்பது கோலிவுட் அறிந்த உண்மை. இதை நாமும் முன்பே செய்தியாக தெரிவித்திருந்தோம். இந்த ஜோடியோடு, இன்னொரு ஜோடி படு நட்பாக பழகி வருகிறதாம் இப்போது.

பெல்காம் பேரழகியான ராயும், அவரது பாய் பிரண்டும் ஒரே பிளாட்டில் கொஞ்ச காலமாக தங்கியிருக்கிறார்கள். நீண்ட காலமாகவே இருவரும் நட்பு பாராட்டி வருகிறார்கள்.

இந்த ஜோடியும், கடவுள் ஜோடியும் இப்போது நெருக்கமாகி விட்டனராம். நான்கு பேரும் பல நேரங்களில் ராயின் பிளாட்டிலேயே தங்கி விடுகிறார்களாம். விடிய விடிய பேசிப் பேசி காதலை வளர்க்கிறார்களாம். பேச்சு பேச்சாக இருப்பதில்லை என்பதுதான் இந்த கிசுகிசுவின் ஹைலைட் மேட்டர்.

உற்சாகமாக, உல்லாசமாக நடந்து வரும் இந்த பேச்சுவார்த்தை விடிந்து வெள்ளைக்கோழி கூவும்போதுதான் முடிவுக்கு வருகிறதாம்.

கடவுளும், மருதமலையும் கூட இப்போதெல்லாம் சேர்ந்தேதான் தங்குகிறார்களாம். இருவரும் சேர்ந்து தங்கும் ஹோட்டலைச் சேர்ந்தவர்கள் அவர்களின் காதல் நெருக்கம் பற்றி கதை கதையாக பேசுகிறார்கள்.

நல்ல காதல், நல்லா வளரட்டும்!

More from Filmibeat

Read more about: nila
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X