»   »  அசிஸ்டெண்டுகளின் வாழ்க்கையில் விளையாடும் அருவா இயக்குநர்!

அசிஸ்டெண்டுகளின் வாழ்க்கையில் விளையாடும் அருவா இயக்குநர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வேக வேகமாக படம் எடுப்பதில் கமர்ஷியல் கில்லாடி அந்த இயக்குநர். அவர் இயக்கிய ஒரு படத்தின் மூன்றாம் பாகம் அடுத்த வராம் வரவிருக்கிறது. கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் இயக்குநர் உதவி இயக்குநர்களுக்கு கிள்ளிக்கூட கொடுப்பதில்லை. அது மட்டுமல்ல... இந்த தன்மானம் என்ற ஒரு வஸ்து இருப்பவர் யரௌம் இயக்குநரிடம் உதவியாளராக இருக்கவே முடியாதாம்.

Aruva director plays with the life of assistants

மாட்டுக்கு கூட ப்ளூ க்ராஸ் இருக்கு... பீட்டா இருக்கு... ஆனால் இவரோ உதவி இயக்குநர்களை மாடு, நாயை விட கேவலமாக நடத்துவாராம். ஸ்பாட்டில் அவர் ஒரு ஜீன்ஸ் போட்ட சாடிஸ்ட். அசிஸ்டெண்ட்களை ஸ்பாட்டில் எல்லோர் முன்பு அடித்து காயப்படுத்தி அழ வைப்பது தான் இவரின் பொழுதுபோக்கு.

அது மட்டுமல்ல தனது அசிஸ்டென்ட்கள் ஏதாவது படம் கமிட் ஆனால் அந்த கம்பெனிக்கு போனடித்து அதனைக் கெடுத்தும் விடுவார். இதையெல்லாம் மீறி ஒரு அசிஸ்டெண்ட் தான் முதன்முறையாக இயக்குநரிடம் இருந்து வந்து படம் எடுத்திருக்கிறார்.

பிரபல டான்ஸ் மாஸ்டரின் சகோதரரை வில்லனாக்கி எடுத்த அந்த படம் இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது. காரணம் இயக்குநர்தான். அது ரிலீஸ் ஆகிவிடக்கூடாது என்பதற்காகவே லட்சக்கணக்கில் செலவு செய்து தடுக்கிறாராம்.

மனுஷனாய்யா நீ?

English summary
The weapon commercial director plays with his assistants life in every movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil