»   »  பாலா படத்தில் ஆர்யா இல்லையா?

பாலா படத்தில் ஆர்யா இல்லையா?

Subscribe to Oneindia Tamil

பாலா இயக்கத்தில் உருவாகி வரும் நான் கடவுள் படத்தில் ஆர்யா இல்லை, அவருக்குப் பதில் விக்ரம்நடிக்கவுள்ளார் என்ற வதந்தி வலுத்து வருகிறது. ஆனால் அதில் உண்மை இல்லை என்று பாலா விளக்கியுள்ளார்.

பாலா எப்போது நான் கடவுள் படத்தின் ஸ்கிரிப்டை கையில் எடுத்தாரோ அப்போதிருந்தே அடுத்தடுத்துசர்ச்சைகள் வரிசையாக அணி வகுக்க ஆரம்பித்து விட்டன.முதலில் நடிப்பதாக இருந்த அஜீத்துக்கும், பாலாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பாலா தரப்பு,அஜீத்தை அடித்ததாக கூட செய்திகள் வந்தன. இந்த கலாட்டாவால் நான் கடவுள் படத்திலிருந்து விலகி விட்டார்அஜீத்.

இதையடுத்து ஆர்யாவை நடிக்க ஒப்பந்தம் செய்தார் பாலா. அதிலும் சிக்கல் எழுந்தது. அப்போது சரணின்வட்டாரம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் ஆர்யா. ஆனால் பாலா கூப்பிட்டதால், சரண் படத்தைதொப்பென்று போட்டு விட்டு நான் கடவுளுக்கு ஓட எத்தனித்தார் ஆர்யா.

கடுப்பாகிப் போன சரண், பஞ்சாயத்தைக் கூட்டி, தனது படத்தில் நடித்து முடித்து விட்டுத்தான் பாலா படத்துக்குஆர்யா போக வேண்டும் என முறையிட்டார். அதை ஏற்ற நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும்,அப்படித்தான் செய்ய வேண்டும் என ஆர்யாவுக்கு கட்டளையிட்டன.

இதனால் வட்டாரம் படத்தில் நடித்தார் ஆர்யா. அப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்ததைத் தொடர்ந்து நான்கடவுள் படத்தை ஆரம்பித்தார் பாலா. ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் இப்போது புது வதந்தி கிளம்பிகோலிவுட்டை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஆர்யாவின் நடிப்பில் பாலாவுக்கு திருப்தி ஏற்படவில்லை என்றும் இதனால் ஆர்யாவைத் தூக்கி விட்டு, விக்ரமைநடிக்க வைக்கப் போகிறார் என்றும் அந்த வதந்தி கூறுகிறது.இதை உறுதிப்படுத்துவது போல சமீபத்தில் விக்ரமை பாலா சந்தித்து நீண்ட நேரம் பேசியுள்ளார். இதனால்ஆர்யாவுக்கு ஆப்பு என்ற செய்தியை கோலிவுட் வதந்தியாளர்கள் உறுதியாக சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

இது நிசமா என்று பாலாவிடமே கேட்டபோது வழக்கம் போல மர்மமான ஒரு சிரிப்பை உதிர்த்தவர், இல்லை,நான் கடவுள் திட்டமிட்டபடி போய்க் கொண்டிருக்கிறது. ஆர்யாதான் நடித்துக் கொண்டிருக்கிறார் என்றார்.

அப்படியானால் விக்ரம் நடிப்பதாக செய்தி கிளம்பியுள்ளதே, நீங்கள் இதுதொடர்பாகத்தான் அவரைப்பார்த்தீர்களா என்று கேட்டால், விக்ரமை நான் சந்தித்ததற்குக் காரணம் வேறு என்று மட்டும் சொல்லி சுருக்கிக்கொண்டார் பாலா.

ஆனால் கோலிவுட்டில் இப்படிக் கிசுகிசுக்கிறார்கள். விக்ரமிடம் நான் கடவுள் கதையை பாலா கூறி ஆர்யாவுக்குப்பதில் அதில் நடிக்க வேண்டும் என்று கேட்டுள்ளாராம். ஆனால் ஆர்யாவை நடிக்க வைத்து காட்சிகளைஆரம்பித்து விட்டீர்கள். இப்போது நான் குறுக்கிடுவது நாகரீகமாக இருக்காது என்று கூறி நாசூக்காக மறுத்துவிட்டாராம்.

மேலும், இப்போது பீமா படத்தில் படு பிசியாக நடித்துக் கொண்டிருப்பதால் அதை விட்டு விட்டு வருவதும்சரியாக இருக்காது என்றும் விக்ரம் கூறினாராம். ஆர்யா மீது பாலாவுக்கு திடீரென அதிருப்தி ஏற்பட என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால்இப்போதைக்கு ஆர்யா மாற்றப்படவில்லை என்பது மட்டும் உறுதியாகியிருக்கிறது.

நவம்பர் 17ம் தேதி நான் கடவுள் யூனிட் வாரணாசிக்கு ஷிப்ட் ஆகிறது. அங்கு அடுத்த கட்ட படப்பிடிப்பைமேற்கொள்ளவுள்ளார் பாலா. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு இங்கு படப்பிடிப்பு நடக்கவுள்ளதாம். ஆர்யா,பாவனா உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் இங்கு படமாக்கப்படவுள்ளன.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil