வரட்டா மாமே டுர்ர்.. வேலைக்கு ஆகாத டைரக்டர்.. டாட்டா காட்டிய அசிஸ்டண்ட் டைரக்டர்கள்.. என்ன முருகேசா?

By Staff

சென்னை: அதிமேதாவி இயக்குநர் என சீன் போட்டுக் கொண்டிருந்த இயக்குநர் இயக்கிய படங்கள் தொடர்ந்து வெளியாகவே முடியாமல் திணறிக்கொண்டு கிடப்பில் கிடக்க அவரை நம்பியிருந்த ஒரு சில உதவி இயக்குநர்களும் இதற்கு மேல் இவரை நம்பிக்கொண்டிருந்தால் சினிமா கனவை மறந்து விட வேண்டியது தான் என புதிதாக வந்த ஒரு சில இயக்குநர்களிடம் தஞ்சம் அடைந்து விட்டதாக பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பொதுவாகவே உதவி இயக்குநர்களுக்கு இயக்குநர்கள் கோடிகளில் சம்பளம் வாங்கினாலும் அள்ளிக் கொடுக்காமல் கிள்ளிக் கூட கொடுக்காமல் பேட்டா காசை தவிர பெரிதாக சம்பளம் என்ற ஒன்றையே கொடுக்கமாட்டார்கள்.

Assistant Directors left the Popular Director due to lack of movies and salary
Photo Credit:

ஒரு சில இயக்குநர்களை பிரபல நடிகர் கூப்பில் உட்கார வைத்துள்ள நிலையில், அந்த இயக்குநர்களை நம்பி சில உதவி இயக்குநர்கள் பல்லை கடித்துக் கொண்டு தினமும் ஆபீஸ் வருவது ஃபாரின் படங்களை பார்த்து சீன் எழுதுவது என காலத்தை ஓட்டி வருகின்றனர்.

அசிங்க அசிங்கமாக திட்டும் இயக்குநர்: ஆனால், அந்த கொடுப்பினை கூட இந்த அதிமேதாவி இயக்குநரிடம் வேலை பார்க்கும் உதவி இயக்குநர்களுக்கு இல்லை என்கின்றனர். கடந்த சில மாதங்களாக வழங்கி வந்த் பெட்ரோல் கன்வீன்ஸ் மற்றும் டெய்லி பேட்டாவை கூட மாதக் கடைசியில் தருகிறேன் என சொல்லி தினமும் வரவழைத்து கடைசியில் சில மாதங்களாக அதையும் தரவில்லை என்றும் ஏதாவது கேட்டால் அசிங்க அசிங்கமாக திட்டுகிறார் என்றும் புலம்ப ஆரம்பித்த உதவி இயக்குநர்கள் அதிரடியாக இயக்குநருக்கு தக்க பாடத்தை புகட்டியுள்ளார்களாம்.

வரட்டா மாமே டுர்ர்: இயக்குநர் படங்களை இயக்கும் போது அவரிடம் அடி, உதை, திட்டெல்லாம் வாங்கினாலும் ஓடாக தேய்ந்து கடுமையாக உழைத்து படங்களின் அவுட்புட்டுக்காக போராடிய ஒரு சில உதவி இயக்குநர்கள் எப்படியாவது படங்கள் வெளியானால் போதும் நமக்கான வாழ்க்கை கதவு திறக்கும் என காத்திருந்தனர். ஆனால், கடைசி வரை இயக்குநரின் படங்கள் ஏதும் வெளியாவதற்கு வாய்ப்பே இல்லை என தெரிந்த நிலையில், சமீபத்தில் இயக்குநருக்கு பெரிய கும்பிடு போட்டுக் கிளம்பி விட்டார்களாம். ஒரு சில புதிய இயக்குநர்களிடம் உதவி இயக்குநர்களாக சிலர் சேர்ண்டு விட்டார்கள் என்றும் சிலர் தயாரிப்பாளர்களை தேடி வருவதாகவும் கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X