நம்பர் நடிகைக்கு கால் வெக்கிற இடமெல்லாம் கன்னிவெடி.. விட்ட இடத்தை பிடிக்க ஜோசியர் சொன்ன விஷயம்!
சென்னை: புகழின் உச்சியில் இருந்த நம்பர் நடிகைக்கு கால்வெக்கிற இடமெல்லாம் கன்னிவெடி என்கிற கதை. நடிகை என்ன செய்தாலும் அதில் பஞ்சாயத்தும் பிரச்சனையுமாக இருப்பதால், நடிகை இப்போது ஜோசியர் ஒருவரை சந்தித்து அதற்கான பரிகாரத்தை செய்ய உள்ளார்.
நம்பர் நடிகை தமிழ் சினிமாவில் இந்த நடிகை என்ட்ரி கொடுத்ததில் இருந்து பலவிதமான பிரச்சனைகள், கிசுகிசு, காதல், துரோகம் என பலவிஷயத்தை நடந்து வந்துள்ளார். நம்பர் நடிகையே நமக்கு சினிமாவே வேண்டாம் என்று மனவேதனையோடு இருந்த போதுகூட, இவரது ரசிகர்கள் இவரை கைவிட்டது இல்லை. அதுதான் நம்பர் நடிகை சம்பாதித்த மிகப்பெரிய சொத்து. மனதளவில் துவண்டு இருந்த நம்பம் நடிகை அனைத்தையும் தாண்டி மீண்டும் என்ட்ரி கொடுத்து அடுத்தடுத்த பல வெற்றிப்படங்களை கொடுத்து மீண்டும் ஒரு ரவுண்டு வந்தார்.

நேரம் சரியில்லை: இந்த நேரத்தில் தான் மனதிற்குள் மீண்டும் காதல் வர, அந்த காதலருடன் சேர்ந்து பல ஆண்டுகளாக வாழ்த்து வந்த அந்த நம்பர் நடிகை, அவரையே திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணமான நாளில் இருந்து அம்மணிக்கு நேரமே சரியில்லை. கால் வெக்கிற இடமெல்லாம் கன்னிவெடியாகவே இருக்கிறது. பண நஷ்டம் பிரச்சனை, பஞ்சாயத்து, நீதிமன்றம் என நிம்மதியே இல்லாமல் இருக்கிறார். இதுமட்டுமில்லாமல் கணவருக்கு திருமணத்திற்கு பிறகு எந்த வேலையும் சொல்லிக்கொள்ளும்படி நடக்கவில்லை. இதனால், ஜோசியம், ஜாதகத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்ட நம்பர் நடிகை பிரபல ஜோசியரிடம் சென்று முறையிட, அவர் சில பரிகாரங்களை சொல்லி இருக்கிறார். அந்த பரிகாரங்களை சத்தமே இல்லாமல் சரியாக செய்து முடித்துள்ளார்.
ஜோசியர் சொன்ன பரிகாரம்: அதுமட்டுமில்லாமல் அந்த ஜோசியர் நம்பர் நடிகையின் பெயரில் சில மாற்றங்களை செய்தால், விட்ட இடத்தை பிடித்துவிடலாம் என்று சொல்ல, தற்போது, தனது பெயரில் சில மாற்றங்களை செய்யலாம் என்கிற முடிவில் இருக்கிறாராம் நம்பர் நடிகை. ஆனால், உண்மை என்னவென்றால் நம்பர் நடிகைக்கு வயதாகிவிட்டதும், திருமணமாகிவிட்டதும் நம்பர் நடிகையின் மவுசு குறைந்ததற்கு காரணம். ஆனால், நம்பர் நடிகையோ நேரம் சரியில்லை என ஜோசியத்தில் நம்பிக்கை வைத்து பணத்தை வீணாக்கி வருகிறார்.


Click it and Unblock the Notifications











