ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே நடிகையிடம் அத்துமீறல்?.. டைரக்டர் சொல்லியும் கேட்காத நடிகர்?.. இவ்வளவு லீலையா?

By Staff

சென்னை: கோலிவுட்டில் டாப் 4 நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் அந்த மூன்றெழுத்து நடிகர். எவ்வளவுதான் பிஸியாக இருந்தாலும் அவரைப் பற்றி கிசுகிசு வருவதெல்லாம் சுத்தமாக இல்லாமல் இப்போது இருக்கிறது. தான் உண்டு, தன் பட வேலைகள் உண்டு, தனது குடும்பம் உண்டு என்று இப்போது இருக்கும் அந்த நடிகர் தன்னுடைய ஆரம்பகாலத்தில் அப்படி இல்லை. ஃபேமஸான நடிகையை காதலித்துவந்த அவர் என்ன காரணத்தினாலோ பிரிந்துவிட்டார். ஆனால் காதலில் இருக்கும்போது அந்த நடிகையிடம் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே அத்துமீறி சேட்டைகள் செய்துவிட்டாராம்.

தமிழ் சினிமாவில் அந்த மூன்றெழுத்து நடிகருக்கென்று ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரது படங்களும் பல கோடி ரூபாய்க்கு அசால்ட்டாக வியாபாரம் நடக்கக்கூடியவை. இப்போது அவர் டாப் நடிகராக இருந்தாலும் ஆரம்பத்தில் அவரது உடல், உச்சரிப்பு, நடிப்பு என அனைத்தையும் வைத்து பலரால் கிண்டல் செய்யப்பட்டவர். ஆனால் தன்னம்பிக்கையை இழக்காத அவர் தொடர்ந்து முயன்று இப்போது டாப் 4 நடிகர்கள் லிஸ்ட்டில் இருக்கிறார். தனக்கென்று தனி சிம்மாசனத்தையும் அவர் உருவாக்கிவிட்டார்.

At the shooting spot it is Gossip that the top actor has violated the actress

அலைபாய்ந்த மனது: இந்த நடிகர் ஏகப்பட்ட தோல்விகளை கொடுத்தவர்தான். அதற்கு காரணம் அவரது கவனம் சினிமாவில் மட்டும் இருந்ததில்லை. வேறு விஷயங்களிலும் இருந்தன. ஒருகட்டத்தில் இவர் எல்லாம் விரைவிலேயே காணாமல் போய்விடுவார் என்றுதான் ஆரூடம் கூறப்பட்டது. ஆனால் கவனத்தை முறைப்படுத்திய அவர் தரமான கம்பேக் கொடுத்தார். இதற்கிடையே அலைபாய்ந்த அவர் மூன்றெழுத்து நடிகையை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

நல்லதோர் குடும்பம்: மூன்றெழுத்து நடிகையை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர் இப்போது தான் உண்டு தனது வேலையும், குடும்பமும் உண்டு என்று அமைதியாக இருக்கிறார். இதன் காரணமாக அவர் மீது பெரும்பாலும் கிசுகிசுக்கள் எழுந்ததில்லை. ஆனால் நடிகரின் ஆரம்பகாலத்தில் அவர் செய்யாத சேட்டைகளே இல்லை. முக்கியமாக ஒரு நடிகையிடம் இதயம் தொலைத்து தீவிரமாக காதலித்தார். கண்டிப்பாக அந்த நடிகையும், நடிகரும்தான் திருமணம் செய்துகொள்வார்கள் என்றெல்லாம் திரைத்துறையில் பேச்சு இருந்தது.

செம டார்ச்சர்: இருவரும் சேர்ந்து நடித்த ஒரு படம் மெகா ஹிட்டாகி தேசிய விருது எல்லாம் வாங்கியது. அந்தப் படத்திலிருந்துதான் இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி காதலாக மாறியது. அந்த நடிகையை நடிகர் காதலித்தபோது செம லவ் டார்ச்சர் செய்துவிடுவாராம். இரண்டு பேரும் தனியாக ஒரு அப்பார்ட்மெண்ட் எடுத்தே தங்கியிருந்தார்களாம். அந்த சமயத்தில் எல்லாம் நடிகர் நடிக்கும் வேறு படத்தின் ஷூட்டிங் நடக்கும் இடத்துக்கே நடிகை வந்துவிடுவாராம். அப்போது கேரவன் இல்லாத கலாசாரம் என்பதால் பொதுவெளியில் அமர்ந்துதான் பேசிக்கொண்டிருப்பார்களாம்.

கட்டிப்பிடி வைத்தியம்: அப்படி ஒருநாள் ஷாட் இடைவெளியில் இரண்டு பேரும் மரத்தின் நிழலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது என்ன நினைத்தார்களோ தெரியவில்லை இரண்டு பேருமே கட்டிப்பிடித்துக்கொண்டார்களாம். இதை எதிர்பார்க்காத ஷூட்டிங் யூனிட் எப்படி இந்த மாதிரியான நேரத்தில் சென்று அவரை மீண்டும் எப்படி நடிக்க அழைப்பது என்று நினைத்து தயங்கி தயங்கி நின்றார்களாம். பிறகு வேறு வழியில்லாமல் படத்தின் இயக்குநர் கூச்சப்பட்டு அவர்கள் அருகே சென்றதால் கோபப்பட்ட நடிகர் இயக்குநரிடம்; இன்று எனக்கு மூட் சரியில்லை பேக்கப் செய்துகொள்ளலாம் என்று சொல்லிவிட்டு நடிகையை அழைத்துக்கொண்டு ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து கிளம்பிவிட்டாராம்.

இது ஒருநாள் இரண்டு நாளோடு முடிந்துவிடும் என்று பார்த்தால் தினமும் இதே நிலைதான் நீடித்ததாம். இந்த விஷயம் நடிகரின் நலம் விரும்பிகளுக்கு சொல்லப்பட; முக்கியமான ஒருவர் நடிகையையும், நடிகரையும் அழைத்து இப்படி செய்வது சுத்தமாக சரியில்லை. என்ன செய்தாலும் நான்கு சுவர்களுக்குள் வைத்துக்கொள்ளுங்கள். அதை விட்டுவிட்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் பலருக்கு முன்னர் இவ்வாறு நடந்துகொண்டால் இரண்டு பேரின் எதிர்காலத்துக்குமே சரியில்லை என்று வார்னிங் செய்த பிறகுதான் ஆட்டம் அடங்கியதாம். அதுமட்டுமின்றி அந்த காதலும் முறிந்ததாம். இந்த விஷயம்தான் இப்போது கோலிவுட்டில் ஹாட் கிசுகிசுவாக ஒ ஒடிக்கொண்டிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X