மோக்கியாவின் அலப்பறையில் அலரும் நடிகர்கள்.... இயக்குநர்கள்.... தயாரிப்பாளர்கள்...
சென்னை: 'நண்பேண்டா' என்று சொன்னாலே புரிந்து கொள்ளக் கூடிய அந்த காமெடி நடிகரின் மீது ஏகத்துக்கும் எரிச்சலில் இருக்கிறார்களாம் நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள்.
காரணம் கை நிறைய படங்களுடன் வளைய வரும் காமெடி, படம் முடிந்ததும் பட விழாக்கள் எதிலும் கலந்து கொள்வது இல்லையாம். பணம் பார்ப்பதிலேயே குறியாக இருக்கிறாராம்.
சமீபத்தில் காமெடியனின் படங்கள் வரிசையாக திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இனி திரைக்கு வர இருக்கின்ற படங்களின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு எல்லாம் சார் ஆப்செண்ட் போட்டுட்டாராம்.
சில நாட்களுக்கு முன் நடந்த தளபதியின் பட விழாவிற்கு கூட வரவில்லையாம் பாஸ். இதனால், இந்த மோக்கியாவிற்கு போட்டியாக வேறு ஒரு போக்கியாவை அறிமுகப் படுத்தும் முயற்சியில் இறங்கி விட்டார்களாம் அவரது சில 'நலம் விரும்பிகள்'.
Comments


Click it and Unblock the Notifications