Don't Miss!
- Automobiles
6 மாசத்துல வரும்ன்னு சொன்னாங்க... ஆனால் 2 மாசத்துலே கொண்டு வரப்போறாங்க! டாடா போடும் மாஸ்டர் பிளான்!
- News
செந்தில் பாலாஜி ஒரு பச்சோந்தி.. அவருக்கு அடையாளம் கொடுத்ததே ஜெயலலிதா தான்.. செல்லூர் ராஜூ!
- Technology
iPhone எதுக்கு? அதைவிட கம்மி விலைக்கு இந்த பிரீமியம் போனை தர்றோம்.. Apple க்கு Samsung வைத்த வேட்டு!
- Finance
தங்கம் வாங்க இது சரியான சான்ஸ்.. ஏன் தெரியுமா.. இன்று விலை எப்படியிருக்கு?
- Sports
1.5 வருட காத்திருப்புக்கு நியாயம் கிடைக்குமா? கே.எஸ்.பரத் vs இஷான் கிஷான்.. யார் விக்கெட் கீப்பர்??
- Lifestyle
கொலஸ்ட்ரால் மற்றும் பிபி-க்கு முற்றுப்புள்ளி வைக்கும் 'வெங்காய டீ'.. அதைத் தயாரிப்பது எப்படி?
- Travel
சென்னை to டெல்லி விமான பயணமா - டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டது பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஒல்லி நடிகருடன் ஒட்டிக் கொள்ள பார்க்கும் விருது நடிகை.. ஏற்கனவே உடைச்ச ஃபர்னிச்சர் போதாதா?
சென்னை: அண்ணன் உடன் சேர்ந்து நடித்த நிலையில், அடுத்ததாக ஒல்லி நடிகருடன் மீண்டும் இணைந்து நடிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறாராம் அந்த விருது நடிகை.
புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது போல, தேவையில்லாமல் உடல் எடையை குறைத்து பார்க்கவே பரிதாப நிலைக்கு மாறிவிட்டார் அவர்.
ஆனாலும், தனது முயற்சியை கைவிடாமல் தொட்ர்ந்து பெரிய படங்களில் நடிக்க ஏகப்பட்ட சித்து வேலைகளை செய்து வருகிறாராம்.
விஜய் பட டைட்டிலை அபேஸ் பண்ண பிகில் நடிகர்.. பேச்சுலர் பட நடிகை தான் ஹீரோயினாம்!

தம்பி அந்த பக்கம் போகாதே
இந்த நடிகை கமிட் ஆகும் படங்கள் என்றாலே தம்பி அந்த பக்கம் போகாதே என பலரும் எச்சரிக்கை விடுத்தும் கேட்காமல் சில ஹீரோக்கள் சிக்கி சின்னாபின்னம் ஆகி வருகின்றனர். தொடர்ந்து படங்கள் தோல்வியை சந்தித்தாலும், ராசி இல்லாத நடிகை என இவரை ஓரங்கட்டி விடாமல் அடுத்தடுத்து தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் இவரை ஒப்பந்தம் செய்ய ஏகப்பட்ட காரணங்கள் கூறப்படுகின்றன.

வீணான முயற்சி
மீண்டும் முன்னணி நடிகர்களுடன் எப்படியாவது சேர்ந்து நடிக்க வேண்டும் என்கிற முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறாராம் அந்த நடிகை. மாஸ் ஹீரோவுடன் எப்படியாவது சேர்ந்து நடித்து விட வேண்டும் என ஸ்டேட் விட்டு ஸ்டேட் எல்லாம் தாண்டியும் அவர் செய்த முயற்சிகளும், வாசித்த வாசிப்பெல்லாம் கடைசியில் வீணாய் போய் விட்டதால் பயங்கர கடுப்பாகி இந்த முறை கண்டுக்காமல் விட்டு விட்டாராம்.

ஒல்லி நடிகருடன் ஒட்டிக்கொள்ள
இந்நிலையில், அடுத்ததாக எப்படியாவது ஒல்லி நடிகருடன் ஒட்டிக்கொண்டு சர்வதேச அளவில் பிரபலம் ஆகிவிடலாம் என மாஸ் பிளான் போட்டிருக்கிறாராம் அந்த நடிகை. சமீபத்தில், அண்ணன் உடன் இணைந்து நடித்த நிலையில், அதே இயக்குநர் இயக்கத்தில் உருவாக உள்ள அடுத்த பிரம்மாண்ட படத்தில் ஒல்லி நடிகருக்கு ஜோடியாகும் முயற்சியை தீவிரமாக மேற்கொண்டுள்ளாராம் அந்த விருது நடிகை.

ஏற்கனவே உடைச்சது
ஆனால், ஏற்கனவே அந்த நடிகையுடன் ஒல்லி நடிகர் இணைந்து நடித்த அந்த காதல் காவிய ஃபர்னிச்சர் கண்ட மேனிக்கு உடைந்து போனதும், சமீப காலமாக தனது படங்கள் தடுமாறி வரும் நிலையில், சைத்தானை ஏன் சைக்கிள் ஏத்தணும் என்பதில் ரொம்பவே உஷாராக இருக்கிறாராம் ஒல்லி நடிகர். ஆனாலும், நடிகரின் வீக்னெஸ் பாயின்ட்டை டார்கெட் செய்து செக் வைத்து எப்படியாவது உள்ளே நுழையவும் முயற்சி செய்து வருகிறார் என்று பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.