twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்னம்மா ஐஸ் வைக்கிறாரு அந்த ஹீரோயின்.. மாஸ் ஹீரோ படத்தில் நடிக்க இப்படியெல்லாமா சான்ஸ் கேட்பது!

    |

    சென்னை: மாஸ் ஹீரோ படத்தில் மீண்டும் ஜோடி சேர வித விதமா ஐஸ் வைத்து வருகிறாராம் அந்த அவார்டு நடிகை.

    பக்கத்து மாநிலத்தில் மீண்டும் தனது இடத்தை பிடிக்க முயற்சி செய்து வரும் அந்த ஹீரோயின், கோலிவுட்டிலும் தனது கொடியை ஏற்ற ஏகப்பட்ட ரூட்டில் முயற்சி செய்து வருகிறாராம்.

    கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் மாஸ் ஹீரோவுக்கு பெரிய ஐஸ் வைக்க காரணமும் அதுதான் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

    கையில் துப்பாக்கி, வாயில் தோட்டா...மாஸ் காட்டிய பீஸ்ட் இரண்டாவது லுக் கையில் துப்பாக்கி, வாயில் தோட்டா...மாஸ் காட்டிய பீஸ்ட் இரண்டாவது லுக்

    பார்க்கவே சகிக்கல

    பார்க்கவே சகிக்கல

    தனது உடல் எடையை வெகுவாக குறைத்து பார்க்கவே சகிக்காத நிலையில், காட்சி அளித்த அந்த ஒல்லி பெல்லி நடிகை, பழையபடி மார்க்கெட்டை மீண்டும் பிடிக்கும் முயற்சியில் மறுபடியும் உடல் எடையை கூட்டி கலக்கி வருகிறார்.

    பழைய மார்க்கெட்

    பழைய மார்க்கெட்

    குறைந்த காலத்திலேயே பெரிய நடிகையாக கிடு கிடுவென உயர்ந்த தனது மார்க்கெட் திடீரென சரியத் தொடங்கியதால் அப்செட் ஆகி இருந்த நடிகை மீண்டும் தனது பழைய மார்க்கெட்டை பிடிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார்.

    மாஸ் ஹீரோவுடன்

    மாஸ் ஹீரோவுடன்

    பக்கத்து மாநிலத்தில் முன்னணி நடிகர்கள் படத்தில் கமிட் ஆகிய நிலையில், மீண்டும் கோலிவுட்டில் கொடி கட்டிப் பறக்க அந்த மாஸ் ஹீரோவுடன் ஜோடி சேர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் அந்த அவார்டு நடிகை. ஆனால், இதுவரை மாஸ் ஹீரோவின் கருணை அவருக்கு கிடைக்கவில்லையாம்.

    பெரிய ஐஸ்

    பெரிய ஐஸ்

    கடந்த ஆண்டு மாஸ் ஹீரோவுக்காக ஸ்பெஷல் விஷ் பண்ண நிலையில், இந்த ஆண்டும் குத்தாட்டம் போட்டு பெரிய ஐஸ் வைத்துள்ளாராம் அந்த நடிகை. எப்படியாவது மாஸ் ஹீரோவின் அடுத்த படத்தில் ஜோடியாகியே தீருவேன் என்கிற கருத்தில் கவனமாக செயல்பட்டு வரும் அவருக்கு ஏகப்பட்ட இளம் நடிகைகளின் போட்டி பெரிய தலைவலியாக இருப்பதாக கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கின்றனர்.

    மனசு வைப்பாரா

    மனசு வைப்பாரா

    ஏற்கனவே சில முறை அந்த ஹீரோயின் உடன் ஜோடி சேர்ந்து நடித்த மாஸ் ஹீரோ மீண்டும் அந்த நடிகையை ஜோடியாக்கிக் கொள்ள மனசு வைப்பாரா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வரிசையாக மும்பை, கேரளாவில் இருந்து ஹீரோயின்கள் களமிறங்கி வரும் நிலையில் மாஸ் ஹீரோ மனசு வைத்தால் மட்டுமே அந்த நடிகையின் கனவு நனவாகும் என்று தெரிகிறது. என்ன நடக்குதுன்னு வெயிட் பண்ணி பார்ப்போம்.

    English summary
    Award actress special wish to impress Mass actor for this reason only. She will try to grab a chance for his next movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X