அவருக்கு கிடைத்ததை போலவே.. நமக்கும் ஒருவர் கிடைக்க மாட்டாரா என ஏங்கும் அவார்டு நடிகை!

By Staff

சென்னை: அவார்டு நடிகையை திருமணம் பண்ணிக்கோ என அவரது அம்மா ரொம்பவே டார்ச்சர் பண்ண ஆரம்பித்து விட்டாராம்.

சில பெரிய இடத்து பிள்ளைகள், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்களின் வரன்களை கூட அம்மணிக்கு காட்டி இருக்கிறாராம்.

ஆனால், இந்த ஃபீல்டில் உள்ள தனக்கு தன்னை முழுசா புரிந்து கொள்ளும் ஒருவர் அமைந்தால் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்லி தவிர்த்து வருகிறாராம்.

கல்யாண பேச்சு

கல்யாண பேச்சு

அவார்டு நடிகையின் வீட்டில் கல்யாண பேச்சு களைகட்டி வருகிறது. விழாக்காலம் என்பதால் ஷூட்டிங்கிற்கு எல்லாம் விடுமுறை விட்டு வீட்டிற்கு வந்து ரெஸ்ட் எடுக்கலாம் என நினைத்த நடிகையை ஒட்டுமொத்த உறவினரும் சூழ்ந்து கொண்டு வரன்களை காட்டி வெறுப்பேற்றி வருகின்றனராம்.

அம்மா அட்வைஸ்

அம்மா அட்வைஸ்

சக சினிமா நடிகைகள் எல்லாம் திருமணம் செய்து கொண்டும் நடிக்கவில்லையா? கல்யாணத்தை தள்ளிப் போடாதே அப்புறம் பல சிக்கல்கள் ஏற்பட்டு விடும் என அம்மா அதிரடியாகவே அட்வைஸ் கொடுத்து விட்டாராம். அட்வைஸை தாண்டி அடுத்த ஆண்டுக்குள் திருமணம் செய்தே ஆக வேண்டும் என்றும் அழுத்தம் கொடுத்துள்ளார் என பரபரப்பான தகவல்கள் கசிந்துள்ளன.

நடிகை மறுப்பு

நடிகை மறுப்பு

ஆனால், அம்மா மற்றும் உறவினர்கள் காட்டும் வரன்களை எல்லாம் நடிகை வேண்டாம் என மறுப்பு தெரிவித்து வருகிறாராம். உன் மனதில் யாராவது இருந்தால் சொல், யாரையாவது பிடித்து இருந்தால் கூட சொல் கட்டி வைக்கிறேன் என கேட்டதற்கு, தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பதை மட்டுமே பதிலாக சொல்லி உள்ளார் அந்த நடிகை.

அந்த பயம்

அந்த பயம்

திருமணத்திற்கு பிறகு சில பிரபலங்கள் பிரிந்து விடுகிற சூழல் சினிமா காரணமாக நிகழ்ந்து வருவதை பார்த்து வரும் அந்த நடிகைக்கு தானும் அப்படியொரு சூழலில் சிக்கி விடக் கூடாது என்று மிகவும் உறுதியுடன் உள்ளாராம். அதன் காரணமாகவே கல்யாண பேச்சை எடுத்தாலே ஒரு வித பயம் தொற்றிக் கொள்கிறதாம்.

நம்பர் நடிகைக்கு கிடைத்தது போல

நம்பர் நடிகைக்கு கிடைத்தது போல

சினிமா நடிகையாக உள்ள நிலையில், தனது நிலைமையை புரிந்து கொண்டு எப்போதுமே காதலிக்கும் நபர் கிடைக்க வேண்டும் என்று ஏங்கி வருகிறாராம். நம்பர் நடிகைக்கு கிடைத்த கணவரை போல தனக்கும் ஒருவர் கிடைத்தால் உடனடியாக திருமணம் செய்து கொள்கிறேன் என்று தனது வீட்டில் நடிகை சொல்லி உள்ளதாக பேச்சுக்கள் கசிந்துள்ளன.

தேடல் ஆரம்பம்

தேடல் ஆரம்பம்

மகளின் அத்தனை கண்டிஷனுக்கும் ஒத்துப் போய் அவளை கடைசி வரை பிரியாத ஒரு மாப்பிள்ளை தேடும் முடிவில் நடிகையின் பெற்றோர் களமிறங்கி உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. ஆனால், நடிகை காதலித்து திருமணம் செய்ய சரியான சக நடிகரையோ அல்லது இயக்குநரையோ தேடி வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X