Don't Miss!
- Sports
"ஒரே கல்லில் 2 மாங்காய்" ஒரே இன்னிங்ஸில் தோனி - சச்சின் சாதனை தகர்த்த ரிஷப் பண்ட்.. எப்படி தெரியுமா
- Finance
ஒரு கப் டீ 20, சேவை கட்டணம் ரூ.50.. மொத்த கட்டணம் ரூ.70.. சதாப்தி ரயில் பயணிகள் ஷாக்!
- News
"சந்தல்" சமூகத்தின் திரௌபதி முர்மு புகழ் "சந்தனமாக" மணக்கட்டும் - ரைமிங்கில் வாழ்த்திய கிருஷ்ணசாமி
- Automobiles
டாடாவிற்கு பக்கத்துல கூட யாரும் வர முடியாது! மாருதிலாம் சீன்லயே இல்ல! விஷயத்தை கேக்கும்போதே ஆச்சரியமா இருக்கு!
- Lifestyle
இந்த வயசுக்கு மேல ஆண்களுக்கு இதய நோய் மற்றும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு ரொம்ப அதிகமாம்.. ஜாக்கிரதை!
- Technology
Samsung: கொஞ்ச காசு இப்போ கட்டுங்க, மிச்சம் 12 மாசம் கழிச்சு கொடுங்க.. ஸ்மார்ட்TV மீது சலுகை!
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
நடிச்சது போதும் சொல்ற பையனுக்கு கழுத்த நீட்டு.. அவார்டு நடிகைக்கு ஆர்டர் போட்ட அம்மா.. ஏன் இப்படி?
சென்னை: அவார்டு வாங்கிய பின்னரும் அந்த நடிகை நடிக்கும் படங்கள் ஓவர் ஆக்டிங்காகத் தான் இருக்கு என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
மேலும், தொடர்ந்து அந்த நடிகையை ஃபிளாப்பும் துரத்தி வருவது நடிகைக்கு மிகப்பெரிய பின்னடவை ஏற்படுத்தி உள்ளது.
அந்த முன்னணி நடிகருடன் ஜோடி போட்டு நடித்துள்ள படம் நிச்சயம் கை கொடுக்கும் என பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நடிகைக்கு அதுவும் அல்வா கொடுக்க நடிகையின் அம்மா ரொம்பவே அப்செட் ஆகி விட்டாராம்.
டான் கிளைமேக்ஸை தியேட்டரில் நிஜமாக்கிய இயக்குநர்.. கண் கலங்கி அழும் வீடியோ டிரெண்டாகி வருது!

வாரிசு நடிகை
சினிமா உலகில் ஹீரோயினாக கலக்கி வந்த அந்த முன்னணி நடிகையின் வாரிசு தான் இந்த அவார்டு நடிகை. ஆரம்பத்தில் பப்ளி கேர்ளாக சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்து நடிப்பால் அசத்தி வந்த நடிகையின் ஆழ் மனதுக்குள் சென்று நீங்க உலகமகா நடிகை என யாரோ உசுப்பேற்றி விட்டார்கள் போல தெரிகிறது.

அவார்டுகளாக
அந்த நடிகையும் அதை நம்பி தனக்குள் இருக்கும் பூனையை எழுப்பி விட தாறுமாறாக ஒரே ஒரு படத்தில் நடித்து ஏகப்பட்ட அவார்டுகளை வாங்கிக் குவித்து விட்டார். அதன் பின்னர், அப்படியே நடித்து வந்த அந்த நடிகையின் படங்கள் எதுவுமே ஓடாமல் அவருக்கு ரொம்பவே பின்னடவை ஏற்படுத்தி உள்ளது.

தொடர் தோல்வி
ஓடிடி, தியேட்டர் என நடிகை நடித்த அத்தனை படங்களும் தொடர்ந்து தோல்வியை தழுவி வரும் நிலையில், ஹீரோயினாக வேண்டாம் சைடு கேரக்டரில் நடிக்க வாங்க என பல முன்னணி நடிகர்கள் படங்களிலும் அழைப்பு வந்ததும் கொஞ்சம் கூட யோசிக்காமல் இந்த வாய்ப்பாவது வருதேன்னு சென்றது தான் நடிகைக்கு இருந்த மார்க்கெட் அதள பாதாளத்திற்கு செல்ல காரணமே என்கின்றனர்.

ஆபாசமாக
மேலும், சமீபத்தில் ஓடிடியில் பலாத்கார காட்சியில் எல்லாம் நடித்து நல்ல நடிகை என பெயர் வாங்க நினைத்த நடிகைக்கு அம்மா நடிகை செம டோஸ் கொடுத்துள்ளாராம். இப்படியெல்லாம் நடிக்கவே கூடாது என்றும் உன்னை இனிமேல் முன்னணி ஹீரோக்கள் எப்படி புக் செய்வார்கள் என்றும் விளாசி எடுத்து விட்டாராம்.

சொல்ற மாப்பிள்ளைக்கு கழுத்த நீட்டு
மேலும், நடிச்சது போதும் சொல்ற மாப்பிள்ளைக்கு கழுத்த நீட்டு என நடிகையின் அம்மா ஒரே அடியாக அதட்டி ஆர்டர் போட்டிருப்பதால் நடிகை ரொம்பவே அப்செட்டாகி உள்ளார் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே இரு முறை நடிகைக்கு வரன் பார்த்த நிலையில், பெரிய பட வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது என மறுத்து வந்துள்ளார் நடிகை. ஆனால், அத்தனை பெரிய படங்களும் அடுத்தடுத்து தோல்வியை சந்திக்க தற்போது அம்மாவின் கட்டளையை மீற முடியாத சூழலில் உள்ளாராம் நடிகை.