சும்மா ஜவ்வா இழுக்குறாராம் அந்த விருது இயக்குநர்.. பிரகாச நடிகர் படம் என்ன ஆகப் போகுதோ?
சென்னை: சட்டுபுட்டுன்னு ஓரிரு மாதங்களில் படங்களை தயாரித்து ரிலீஸ் செய்து வரும் அந்த பிரகாச நடிகர் அடுத்ததாக விருது இயக்குநர் உடன் இணைந்து நடிக்க உள்ளார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் ஏகப்பட்ட சிக்கல்கள் ஒன்றன் பின் ஒன்றாக உருவாகி வருகிறதாம்.
Recommended Video
ஏற்கனவே அந்த இயக்குநர் நீண்ட நாட்களுக்கு முன்னதாக தொடங்கிய சுதந்திர படத்தையே இன்னமும் நிறைவு செய்ய முடியாமல் தவித்து வருகிறார்.
சும்மா ஜவ்வா இப்படி இழுத்துக் கொண்டே செல்கிறாரே என அந்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் மற்றும் நடிகர்களுக்கே அவர் மீது அதிருப்தி எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

விருது இயக்குநர்
அந்த இயக்குநர் படம் எடுத்தாலே ஏகப்பட்ட விருதுகளை பார்சல் பண்ணி வைங்கப்பா என சொல்கிற அளவுக்கு நல்ல தரமான கதைகளை தேர்வு செய்து நடிகர்களின் முழு நடிப்பையும் வாங்கி ஒவ்வொரு படத்தையும் சிறப்பான முறையில் எடுத்து விருது இயக்குநர் என்றே பெயர் வாங்கி விட்டார் அந்த பிரபல இயக்குநர்.

பிரகாச நடிகர்
கமர்ஷியல் ஹீரோவாக இனியும் காலத்தை ஓட்டக் கூடாது என முடிவுக் கட்டி நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் பிரகாச நடிகர். விருது இயக்குநருடன் ஒரு படம் நடித்து விட்டால் சிறப்பாக இருக்கும் என அவருக்கு கால்ஷீட் ஒதுக்கிய நிலையில், முந்தைய படத்தின் வேலையிலேயே இன்னமும் சிக்கித் தவித்து வருகிறாராம் அந்த இயக்குநர்.

ஜவ்வா இழுக்குறாரு
சட்டு புட்டுன்னு படத்தை முடித்துக் கொடுப்பார் அந்த விருது இயக்குநர் என நினைத்த நிலையில், அந்த சுதந்திர படத்தை பல ஆண்டுகளாக எடுத்துக் கொண்டே இருக்கிறாராம் அந்த விருது இயக்குநர். படம் சரியாக வர வேண்டும் என நேர்த்தி பார்த்து இயக்குநர் எடுத்து வருகிறார் என இயக்குநர் தரப்பும் காசை கரியாக்குகிறார் என தயாரிப்பு தரப்பும் போட்டா போட்டி சண்டையில் இறங்கி உள்ளதாம்.

நடிகருக்கு திட்டு
ஏற்கனவே துணை கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெரைட்டி நடிகர் தனது சொல் பேச்சை கேட்காமல் இஷ்டத்துக்கு வேறு ஒன்று செய்வதால் அப்செட் ஆன அந்த இயக்குநர் அவரை செட்டிலேயே வைத்து அவமதித்ததாகவும் பேச்சுக்கள் முன்னதாக கிளம்பின. இதுவரை நல்லா ஓடிக் கொண்டிருந்த வண்டி தற்போது புதிய புதிய அணிகளுடன் இணைவதால் ஏகப்பட்ட இடங்களில் பிரச்சனையை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.

பிரகாச நடிகரின் முடிவு என்ன
விருது இயக்குநர் தாமதம் செய்து கொண்டே போனால், பிரகாச நடிகர் அடுத்ததாக இன்னொரு இயக்குநருடன் இணைந்து ஒரு படத்தை முடித்து விட்ட பிறகு தான் மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்றும் படம் பற்றி முடிவு செய்வார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. வரலாற்று சிறப்புமிக்க அந்த படம் எப்போது தொடங்கும் எப்போது திரைக்கு வரும் என ஏகப்பட்ட ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருப்பதை இரு தரப்பும் மனதில் வைத்து விரைவில் வேலைகளை தொடங்கினால் நல்லா இருக்கும் என கோடம்பாக்கத்தில் பேசிக்கிறாங்க!


Click it and Unblock the Notifications











