பாலிவுட்டில் பருப்பு வேகல.. கோலிவுட் கதவை தட்டும் பேபி நடிகை.. கடைசியில நிலைமை இப்படி ஆகிப்போச்சே!
சென்னை: பாலிவுட் பக்கம் போன பல தென்னிந்திய நடிகைகளுக்கு கடைசியில் கிடைத்தது என்னமோ அல்வா தான் என்கின்றனர். கடந்த சில வருடங்களாக எப்படியாவது பாலிவுட்டில் டாப் நடிகையாக வேண்டும் என சில மீடியேட்டர்களை நம்பி சில கோடிகள் வரை செலவு செய்து கிளி போல காத்துக் கொண்டிருந்த பேபி நடிகைக்கு கடைசி வரை ஒரு பட வாய்ப்புக்கூட கிடைக்காமல் போனதால் சொர்க்கமே என்றாலும் அது என் சொந்த ஊர் சென்னையை போல வருமா என பாடிக் கொண்டு பெட்டி படுக்கையை எடுத்துக் கொண்டு இங்கேயே வந்துவிட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.
ஏகப்பட்ட பிளாஸ்டிக் சர்ஜரிக்களை செய்து காக்காவும் பீக்காக் ஆவது போல தனது தோற்றத்தையே மாற்றி டாப் ஹீரோயினாக உருமாறிய அந்த பேபி நடிகைக்கு சில ஆண்டுகள் ஜெட் வேகத்தில் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியதும் அவர் போட்ட ஆட்டத்துக்கு கொஞ்சம் நஞ்ச அளவே இல்லை என சொல்லும் அளவுக்கு அவரது கொடி கோடம்பாக்கம் முதல் மும்பை பாந்த்ரா வரை பறக்கத் தொடங்கியது.

ஆனால், ஓவராக உடலை வருத்திக் கொண்டால் அதன் விளைவை அந்த நடிகை தான் சமாளிக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாக சில ஆண்டுகளிலேயே அவரது வாழ்க்கையில் ஏகப்பட்ட புயல்கள் வீசிக்கொண்டே இருப்பதால் அவரும் மனதளவில் ரொம்பவே உடைந்து போயுள்ளதாக கூறுகின்றனர்.
டம்மி அறிவிப்பு: கடைசியாக நடிகையின் பிறந்தநாளை முன்னிட்டு சும்மா பேச்சுக்கு ஒரு பட அறிவிப்பை அவரே வெளியிட்டு இருந்தார். ஆனால், கடைசி வரை அந்த படத்தின் ஷூட்டிங் இன்னமும் தொடங்கவில்லை என்கின்றனர். அதுவெறும் டம்மி அறிவிப்புதான் என்றும் மீண்டும் நடிக்க வந்துவிட்டேன். பட வாய்ப்புகள் குவிவதாக நடிகை அடித்த பப்ளிசிட்டி பல்லை இளிக்க அவருக்கு புது பட வாய்ப்புகள் இதுவரை ஒன்று கூட கிடைக்கவில்லை என்பதுதான் நம்பவில்லை என்றாலும் நெசம் என்கின்றனர்.
டாட்டா காட்டிய பாலிவுட்: சக நடிகைகள் எல்லாம் பாலிவுட்டில் ஒரு படமாவது பண்ணிட்டு வராங்களேன்னு இந்த நடிகையும் தைரியமாக நம்பி கிளம்பிப்போன நிலையில், நடிகைக்கு எப்படியாவது பாலிவுட் பட வாய்ப்பை பெற்றுத் தருகிறோம் என உத்தரவாதம் அளித்த ஏஜென்சி கடந்த சில ஆண்டுகளாக நடிகையை கால் கடுக்க அலையவிட்டது தான் மிச்சம் என்கின்றனர். கடைசியில் நடிகை இதற்கு மேலும் காத்திருந்தால் கிழவியாக வேண்டியதுதான் என சொந்த ஊருக்கே டிக்கெட் போட்டுவிட்டதாக கூறுகின்றனர்.
கோலிவுட் கதவுகளை தட்டும் பேபிம்மா: சொந்த ஊரில் ராணியாக வாழ வேண்டிய நடிகை இக்கரைக்கு அக்கரை பச்சை என பல மாநிலங்களுக்கு பறந்து சென்று போய் பார்த்து வந்த நிலையில், அனைத்து இடங்களிலும் நடிகைக்கு ஆப்பு வைத்தது தான் மிச்சம் என்பதை புரிந்துக் கொண்ட நடிகை தனது சம்பளத்தை பாதியாக குறைத்துக் கொண்டு நடிக்கிறேன் என சில முன்னணி கோலிவுட் தயாரிப்பாளர்களையும் நடிகர்களையும் தனக்குத் தெரிந்த இயக்குநர்களின் வீட்டுக் கதவுகளையும் தற்போது தட்டிக் கொண்டிருப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன. ஏற்கனவே வயதான நடிகை ஒருவர் கொடிகட்டி பறந்துக் கொண்டிருக்கும் நிலையில், அவருக்குப் போட்டியாக எளிதில் இங்கே நுழைந்துவிடலாம் என்கிற முடிவுடன் நடிகை காலடி எடுத்து வைத்திருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











