பணத்தை தண்ணியா செலவு செய்யும் பேபி நடிகை.. எல்லாம் மீண்டும் பழைய இடத்தை பிடிக்கத்தானாம்?

By Staff

சென்னை: பழைய பன்னீர் செல்வமாக சினிமாவில் கம்பேக் கொடுக்க சோஷியல் மீடியா பெரும்புள்ளிகளுக்கு தாராளமாக பணத்தை செலவு செய்து தொடர்ந்து டிரெண்டிங்கில் இடம் பிடிக்க பலே வேலைகளை பார்த்து வருகிறாராம் அந்த பேபி நடிகை என பகீர் தகவல்கள் கசிந்துள்ளன.

முகத்தில் ஹீரோயினுக்கான கலை எல்லாம் ஓய்ந்துவிட்டது என்றும் இனிமேல் சைடு ரோலில் வேண்டுமானால் நடிக்க ரெடியா என நடிகை வாய்ப்புத் தேடி தட்டிய கதவுகள் எல்லாம் ஷட்டரை சாத்த அம்மணி அப்செட்டின் உச்சத்துக்கே சென்று விட்டாராம்.

Baby Actress spend more money on social media influencers to get her throne back

தன்னை விட வயதான நடிகைகள் இன்னமும் டாப் நடிகைகளாக வலம் வரும் நிலையில், தான் மட்டும் எப்படி துணை நடிகையாக நடிப்பது என்கிற நிலையில் தான் அவர் கைக்கு வந்த சில பட வாய்ப்புகளையும் வேண்டாம் என உதறித் தள்ளிவிட்டு நடித்தால் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்கிற குறிக்கோளுடன் இருப்பதாக பேச்சுக்கள் புகைந்து வருகின்றன.

வாய்ப்புகளை என்னை தேடி வரவைக்கிறேன் பாருங்க: சினிமா வாய்ப்புகள் திடீரென அந்த பேபி நடிகைக்கு கிடைக்காமல் போன நிலையில், அவரை அணுகிய ஒரு சில இயக்குநர்களுக்கும் நோ சொன்ன நடிகை எனக்கா மார்க்கெட் போய்விட்டது. இன்னும் கொஞ்ச நாளில் பாருங்க, எப்படி வாய்ப்புகள் என்னை தேடி வரவைக்கிறேன் பாருங்க என சவால் விட்டு அதற்கான காய்களை நகர்த்தி வருகிறார் என்கின்றனர்.

ஏமாற்றிய ஏஜென்ட்: மும்பையில் ஒரு ஏஜென்ட்டை நம்பி 1 வருஷம் காத்துக் கிடந்த நிலையில், ஒரு முன்னணி நடிகர் கூட பேபி நடிகையை ஹீரோயினாக்கலாம் என்பதற்கு தலையே ஆட்டவில்லையாம். அவரை வைத்து முன்பை போல படமெடுக்க முடியாது எனக்கூறி துரத்திவிட்டுவிட்டதாக பகீர் கிளப்புகின்றனர். நடிகைக்கு வாய்ப்பு வாங்கித் தருகிறேன் என சொல்லி பணத்தை பிடுங்கிய ஏஜென்ட்டும் இளம் நடிகர்களுடன் கூட நடிக்க வைக்க முடியாமல் ஏமாற்றி விட்டதால் நடிகை ரொம்பவே அப்செட் ஆகிவிட்டாராம்.

பணத்தை தண்ணியா செலவு செய்யும் நடிகை: எப்படியாவது மீண்டும் தனது பழைய நிலையை அடைய வேண்டும் என்பதில் வெறியாக இருக்கும் நடிகை சமூக வலைதளங்களுக்கும் சில யூடியூப் சேனல்களுக்கும் பணத்தை தண்ணியா செலவு செய்து தனது பெருமையை பரப்பி டிரெண்டிங்கில் வைக்க பலே வேலைகளை பார்த்து வருகிறார் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X