»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நந்தா வெளிவந்த கையோடு பாலா-லைலா காதல் செய்தியும் வெளியாகி பரபரப்பூட்டியது.

உண்மையில் பாலாவோடு லேட்டஸ்டாக இணைத்துப் பேசப்பட்டு வருபவர் ராஜஸ்ரீ தான். சேதுவில் மனநலமற்றவராகவும், நந்தாவில் சூர்யாவின் தாயாகவும்நடித்தவர் தான் இந்த ராஜஸ்ரீ.

இந்த உண்மையான காதல் செய்தியை மறைக்கவே லைலா-பாலா காதல் செய்தி பரப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சேது படத்தில் நடித்த போதே பாலாவுக்கும், ராஜஸ்ரீக்கும் இடையே ஒரு அன்னியோன்யம் ஏற்பட்டிருக்கிறது. அது காதலாகவும் மாறியிருக்கிறது. படம்முடிந்த பின்பும் இந்த நட்பு நீடித்திருக்கிறது.

நந்தாவிலும் ராஜஸ்ரீ நடித்ததால் இந்த சந்திப்பு அதிகமானது. இதில் ராஜஸ்ரீ பாலாவின் பைத்தியமாகவே மாறியிருக்கிறார். பாலாவை திருமணம் செய்துகொள்ள ராஜஸ்ரீ ஆர்வமாக உள்ளார்.

வயதும் ஆகிவிட்டது. வாய்ப்பும் வரவில்லை. எவ்வளவு நாளைக்குத் தான் பாலாவோடு சும்மா சுற்றுவாய் என்று தாய்க்குலம் கண்டிக்க, பாலவைதிருமணம் செய்து கொள்ளும்படி நச்சரித்திரித்து வருகிறார் ராஜஸ்ரீ.

ஆனால், பாலாவுக்கு கால்கட்டு போடுவதற்காக தீவிரமாக மதுரையில் பெண் பார்த்து வருகிறார்கள் அவரது பெற்றோர். வீட்டில் பார்க்கும்பெண்ணையே திருமணம் செய்து கொள்வதாக பெற்றோர்களுக்கு சம்மதம் கொடுத்திருக்கிறார் பாலா.

இதையடுத்து என்னை திருமணம் செய்யமால் போனால் தற்கொலை செய்து கொள்வேன் என்று பாலாவிடம் ராஜஸ்ரீ கூறிவிட்டதாகத் தெரிகிறது.

இதனால் விழி பிதுங்கி நிற்கிறாராம் பாலா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil