தோழிகள் கொடுத்த அட்வைஸ்.. நடிகரை காதலித்து கழட்டி விட்ட கண்ணழகி நடிகை?

By Staff

சென்னை: தோழிகள் கொடுத்த அட்வைசால் உருகி உருகி காதலித்து வந்த நடிகரை கழட்டி விட்டுள்ளார் கண்ணழகி நடிகை.

கண்ணழகி நடிகையான இவர், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதே பெரிய நடிகரின் படம் என்பதால், சினிமாவில் இவருக்கு என்று தனி மவுசு உள்ளது.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், பின் நாளில் கதாநாயகியாக அறிமுகமாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார்.

beautiful actress and dance master breakup story

கண்ணழகி நடிகை: க்யூட்டான சிரிப்பு, அழகான கண்ணுடன் வலம் வந்த இவரை தமிழ் ரசிகர்களுக்கு பிடித்துப்போக அனைத்து டாப் நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்தார். சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்த கண்ணழகி நடிகை மீது எத்தனையோ நடிகர்கள் காதல் வயப்பட்டுள்ளனர். அப்படி நடிகையின் அழகில் மயங்கிய வாட்டசாட்டமான நடிகர், இவரை திருமணம் செய்து கொள்ள, பெண் கேட்டு வீட்டிற்கே சென்று இருக்கிறார். ஆனால், இதற்கு கண்ணழகியின் அம்மா நோ சொல்லியது மட்டுமில்லாமல், இனிமேல் வாட்டசாட்டமான நடிகரின் படத்தில் நடிக்கக்கூடாது என்று மகளுக்கு ஆடரும் போட்டுள்ளார்.

காதலில் விழுந்த நடிகை: இப்படி யாருக்கும் மடங்காத காட்டுக் குதிரையாக இருந்த அந்த முன்னணி நடிகை, ஒல்லி டான்ஸ் நடிகரின் படத்தில் இணைந்து நடித்த போது அவரை காதலித்துள்ளார். அதுவரை கவர்ச்சி காட்டாமல் குடும்ப பாங்கான கேரக்டரில் நடித்து வந்த அந்த கண்ணழகி நடிகை, ஒல்லி டான்ஸ் நடிகரின் படத்தில் ஓவர் கவர்ச்சி காட்டி நடித்து பெயரையும் கெடுத்துக்கொண்டார்.

வீட்டில் வெடித்த பூகம்பம்: இதையடுத்து, பல இடங்களில் ஜோடியாக இருவரும் சுற்றித்திரிய அது கோடம்பாக்கம் வட்டாரத்தில் பேசு பொருளானது. இது கண்ணழகி நடிகையின் அம்மா காதுக்கு போய் குடும்பத்தில் பூகம் வெடித்தது. அதுவரை தாய் சொல்லே மந்திரம் என்று இருந்த அந்த கண்ணழகி நடிகையோ அம்மாவை தூக்கி ஏறியும் முடிவுக்கே வந்துவிட்டார்.

கழட்டிவிட்ட நடிகை: இதன்பின் கண்ணழகி நடிகையின் நெருங்கிய தோழிகள், ஒல்லி டான்ஸ் நடிகர் திருமணமானவர் என்றும், அவரது திருமணத்தின் போது நடந்த சர்ச்சை குறித்தும் எடுத்து கூறினர். மேலும், அந்த நடிகருக்கு அதுதான் வேலை.. அவர் நிறைய நடிகைகளை காதலித்திருக்கிறார்.. உன்னையும் அப்படி தான் காதலிக்கிறார் என்று அட்வைஸ் மேல அட்வைஸ் கொடுத்துள்ளனர். இதையடுத்து கண்ணழகி நடிகை எதுக்குடா வம்பு என்று அவரை கழட்டி விட்டு, வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு ஒல்லி டான்ஸ் நடிகருக்கு டாடா காட்டி விட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X