அந்த விளம்பரத்தில் நடிக்க இத்தனை கோடி சம்பளமா?.. கால் அழகி நடிகைக்கு அடித்த ஜாக்பாட்?
சென்னை: கால் அழகி நடிகை பெரிய ஹீரோக்களின் படங்களில் நடித்து வரும் நிலையில், பல கோடி சம்பளத்துக்காக காண்டம் விளம்பரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. பல வருடங்களாக சினிமாவில் அந்த நடிகை நடித்து வந்தாலும், ஒரு சில படங்களை தவிர்த்து அவருக்கு பெரிய வெற்றிப் படங்கள் என பெரிதாக ஒன்றுமே இல்லை.
இந்த ஆண்டு அந்த நடிகை நடித்த படங்களும் வசூல் ரீதியாக வெற்றிப் பெறாத நிலையில், கைவசம் நடிகைக்கு மாஸ் நடிகரின் படம் உள்ளிட்ட ஒரு சில படங்கள் மட்டுமே உள்ளதாக கூறுகின்றனர். தொடர்ந்து நடிகை நடிக்கும் படங்கள் மீண்டும் தோல்வியை சந்தித்து வரும் நிலையில், அவருக்கு புதிய வாய்ப்புகளை வழங்க தயாரிப்பு நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருவதாகவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

காண்டம் நிறுவனம் ஒன்று தொடர்ந்து ஒரு வருடமாக நடித்தால் இந்த நடிகை தான் நடிக்க வேண்டும் என பிடிவாதம் பிடித்து வந்த நிலையில், ஒருவழியாக சம்பளம் கட்டுப்படியானதால் நடிகை நடிக்க சம்மதித்து விட்டார் என தகவல்கல் புகையத் தொடங்கி உள்ளன.
கால் அழகி: எத்தனை வருஷம் ஆனாலும், இன்னமும் அதே அழகு மாறாமல், தோற்றம் மாறாமல் அப்படியே தன்னை கட்டுக்கோப்பாக வைத்து வருகிறார் அந்த கால் அழகி. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் தனது படத்தில் இருந்து நடிகையை தூக்கியடித்த நிலையில், பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த நடிகைக்கு கோலிவுட்டில் பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அடுத்தடுத்து குவிந்தன. ஆனால், மீண்டும் நடிகையின் ராசி சரியல்ல என்கிற பேச்சுக்கள் அடிபடத் தொடங்கிய நிலையில், அவருக்கு சினிமா வாய்ப்புகள் மீண்டும் குறையத் தொடங்கி விட்டதாக கூறுகின்றனர்.
முதலில் மறுத்த நடிகை: கடந்த ஆண்டே அந்த பிரபல காண்டம் நிறுவனம் நடிகையை எப்படியாவது தங்களது விளம்பர படத்தில் நடிக்க வைத்து இந்தியா முழுவதும் பிராண்டை பெரிதாக வளர்க்க வேண்டும் என முடிவு செய்து அணுகியுள்ளனர். ஆரம்பத்தில், இப்படியொரு விளம்பரத்தில் நடிக்க அணுகுகின்றனர் என்பதை அறிந்த உடனே அய்யய்யோ முடியாதுங்க என நடிகை மறுத்துவிட்டாராம். மேலும், அவர்கள் ஆரம்பத்தில் நடிகைக்கு ஆஃபர் பண்ண தொகையும் குறைவு தான் என்கின்றனர்.
6 கோடி சம்பளம்: ஆனால், தற்போது நடிகை அந்த விளம்பரத்தில் நடிக்க அவருக்கு 6 கோடி வரை சம்பளமாக கொடுக்க அந்த முன்னணி நிறுவனம் ரெடியாக உள்ளதாகவும், பெரிய சம்பளம் காரணமாக தற்போது நடிகை ஒப்புக் கொண்டதாக தகவல்கள் கசிந்துள்ளன. கூடிய சீக்கிரமே கால் அழகியின் படுகவர்ச்சியான காண்டம் விளம்பரம் டிவிக்களில் அடிக்கடி ஒளிபரப்பாகும் என்கின்றனர். இது எந்தளவுக்கு உண்மை என்பது கூடிய விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.
இமேஜ் பாதிக்குமா?: இதுவரை டாப் ஹீரோயின்கள் யாருமே இதுபோன்ற விளம்பரங்களில் நடிக்க விருப்பம் தெரிவிக்காத நிலையில், காசுக்கு ஆசைப்பட்டு நடிகை இதில், நடிக்க ஒப்புக் கொண்டால் அவரது இமேஜ் டோட்டல் டேமேஜ் ஆக வாய்ப்பு இருக்கா என்றெல்லாம் நடிகை ஆலோசனை செய்திருக்கிறாராம். ஆனால், விழிப்புணர்வு விஷயம் தான் என்கிற ரீதியில் பெரிதாக அடிவாங்க வாய்ப்பில்லை என அவரது ஆலோசகர்கள் கூறவே நடிக்க ஓகே சொல்லியிருக்கிறாராம். ஆனால், மாஸ் நடிகர் படத்துக்கு இதனால், பாதிப்பு வர வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











