ராக்கெட்டா போகும்னு பார்த்தா.. எல்லாமே புஸ்வாணமா ஆகிடுச்சே.. கால் அழகியை கலாய்த்த காம்பெட்டிட்டர்!
சென்னை: கால் அழகிக்கும் அந்த பிரபல நடிகைக்கும் டோலிவுட்டில் பலத்த போட்டி நிலவி வந்த நிலையில், தொடர் தோல்விகளை சந்தித்த நடிகையை பகிரங்கமாக கலாய்த்துள்ளாராம் அந்த போட்டி நடிகை.
பெரிய நடிகர்கள் படங்கள் என்றதுமே கதையை பற்றியோ தனது கதாபாத்திரத்தைப் பற்றியோ கொஞ்சம் கூட கவலைப்படாமல் கால்ஷீட்களை அள்ளிக் கொடுத்துள்ளார் அந்த கால் அழகி.
ஆனால், எல்லாமே காலாவதியான கதைகளாக இருந்த நிலையில், ஒட்டுமொத்தமாக ஓடாமல் போக நடிகைக்கு பெரிய தலைவலியாக மாறி விட்டது.

ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி
கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட் என பெரிய நடிகர்களின் கவனத்தை மொத்தமும் கவர்ந்த அந்த நடிகையின் கைவசம் ஏகப்பட்ட பெரிய பட்ஜெட் படங்கள் கிடைத்தன. அனைத்திலும் ஹீரோயினாக ஒப்பந்தமான நிலையில், ராக்கெட் வேகத்தில் தனது வளர்ச்சி மாறப் போகிறது என நினைத்துக் கொண்டு இருந்த அந்த நடிகைக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது.

எல்லாமே புஸ்வாணம்
தீபாவளி ராக்கெட் போலக் கூட பறக்காமல், எல்லாமே மழையில் நனைஞ்ச புஸ்வாணம் போல படு தோல்வியை சந்திக்க நடிகையை அப்படியே டோலிவுட் மற்றும் கோலிவுட்டில் ஓரங்கட்டி விட்டார்களாம். கைவசம் இருக்கும் பாலிவுட்டின் ஒரு சில படங்களும் வெளியான பிறகு தான் நடிகையின் டோட்டல் டிசாஸ்டர் வெளிவரும் என்கின்றனர்.

அதை நினைத்து சிரிப்பு
நாம தான் கதை கேட்காமல் பெரிய நடிகர்கள் படங்கள் என ஒப்பந்தம் செய்தோம். ஆனால், அந்த பெரிய நடிகர்கள் கூடவா கதை கேட்காமல் இத்தனை பெரிய பட்ஜெட் படங்களை காலி செய்வார்கள் என்பதை அந்த சோகத்திலும் நினைத்து மனதை தேற்றி வந்திருக்கிறார் அந்த நடிகை.

கலாய்த்த காம்பெட்டிட்டர்
இந்நிலையில், அந்த கால் அழகி நடிகையின் கதியை பிரபலத்துடன் சேர்ந்து பேசும் போது கலாய்த்து இருக்கிறாராம் அந்த போட்டி நடிகை. இந்த விஷயம் நடிகையின் காதுகளுக்கு சென்ற நிலையில், தனக்கு நேர்ந்த நிலையை எண்ணி ரொம்பவே ஃபீல் செய்துள்ளாராம் அந்த பிரபல நடிகை.

கதை தான் முக்கியம்
நடிகையை பிரபல நடிகர்கள் படங்களுக்கு யாராவது புக் செய்ய வந்தால், முதலில் பவுண்டட் ஸ்க்ரிப்ட் எடுத்துட்டு வாங்க என்றும் விளக்கமாக கதை மற்றும் தனது கதாபாத்திரத்தை சொல்லுங்க என்றும் திடீரென கேட்க ஆரம்பித்தது இயக்குநர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறதாம். வாய்ப்புகள் வரவில்லை என்றால் கூட பரவாயில்லை நல்ல ரோல் இருந்தால் மட்டுமே நடிப்பேன் என உறுதியான முடிவுக்கே நடிகை வந்தது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











