மேலிடத்திலிருந்து வந்த ஸ்ட்ரிக்ட் ஆர்டர்.. பெட்டி பாம்பாய் அடங்கிய பிரபல விமர்சகர்

By Staff

சென்னை: மேலிடத்திலிருந்து வந்த ஸ்ட்ரிக்ட் ஆர்டரால்தான் பிரபல விமர்சகர் இப்போது அடக்கி வாசித்துக்கொண்டிருக்கிறாராம்.

கோலிவுட்டில் இப்போது விமர்சகர்கள் அதிகம் ஆகிவிட்டார்கள். முன்பெல்லாம் இருந்த விமர்சகர்கள் படம் குறித்தும், படத்தில் நடித்தவர்கள் குறித்தும் டீசண்ட்டாக பேசி ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்ப்பார்கள். ஆனால் இப்போது இருக்கும் விமர்சகர்களோ வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்கிற ரீதியில் விமர்சனம் செய்வதால் படம் எடுக்கும் இயக்குநர்களும், அதில் பணியாற்றியவர்களும் ஒருவித பதற்றத்துடனே இருக்கிறார்கள்.

It is because of strict order that the famous critic is now reading under pressure

வைத்து செய்யும் விமர்சகர்: அப்படிப்பட்ட விமர்சகர்கள் ஒருவர் வெகு பிரபலமாக இருக்கிறார். அவர் அணியும் உடை மூலம் அனைவராலும் அறியப்படும் அவரது விமர்சனத்தை பார்க்க பலரும் ஆவலாக இருப்பார்கள். அவர் செய்யும் விமர்சனத்தில் ஈவு இரக்கம் எதுவும் இல்லாமல் சகட்டு மேனிக்கு வைத்து செய்வார். இதன் காரணமாக தணிக்கை குழுவுக்கு படக்குழு பயப்படுகிறதோ இல்லையோ இவரின் விமர்சனத்துக்கு பயப்படும் நிலை நீடித்தது என்றே கூறலாம்.

பிரபலத்தை கலாய்த்த விமர்சகர்: அவரது விமர்சனத்தை ரசிகர்களும் ரசிக்கவே செய்தனர். ஆனால் ஒருகட்டத்தில் ஹீரோ ஒருவரை உருவ கேலி செய்ததை அடுத்து அவருக்கு எதிராக ரசிகர்களில் ஒருதரப்பினர் திரும்பினர். இதனையடுத்து அவரது விமர்சனங்களுக்கான மவுசு கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. மேலும் அவர்கள் செய்வது போல் நீங்கள் செய்ய முடியுமா என கேட்க அவரும் ஒரு விஷயத்தை செய்து புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதையாக மாறியது.

கோபப்பட்ட இயக்குநர்: அந்த விமர்சகரின் விமர்சனத்தை பார்த்த பல இயக்குநர்கள் உள்ளுக்கு பொருமிக்கொண்டிருந்தனர். ஆனால் ஸ்டைலிஷ் இயக்குநர் என்று பெயர் எடுத்தவர் ஒரு பேட்டியில் ஓபனாக கோபப்பட்டார். அதனையடுத்து அந்த விவகாரம் ட்விட்டரில் விவாதப்பொருளானது.அதேபோல் பன் இயக்குநருக்கும் விமர்சகருக்கும் முட்டிக்கொள்ள அந்த விஷயமும் கொஞ்ச நாட்கள் ஹாட் டாபிக்காக திகழ்ந்தது.

சூடு குறைத்த விமர்சகர்: நிலைமை இப்படி விமர்சகரின் சமீபத்திய விமர்சனங்களில் சூடு கொஞ்சம் தணிந்திருக்கிறது. இதனைக் கண்டு ஒட்டுமொத்த கோலிவுட்டே ஆச்சரியப்பட்டுத்தான்போயிருக்கிறது. ஆனால் அதற்கு பின்னாலொரு காரணம் இருப்பதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. அதாவது மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றிடமிருந்து (அது தயாரிப்பு நிறுவனம் மட்டுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது) விமர்சகருக்கு அழைப்பு சென்றிருக்கிறது.

ஸ்ட்ரிக்ட் ஆர்டர்: இவரும் சென்று பார்த்தபோது தயாரிப்பு நிறுவன தரப்பினர் கொஞ்சம் கோபத்துடனே நீங்கள் விமர்சனம் செய்யும் முறையை மாற்றிக்கொள்ளுங்கள். இல்லையென்றால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார்களாம். இதனால் பதறிப்போன அவர் உயர்ந்த இடத்தை பகைத்துக்கொண்டால் நம்மால் பிழைப்பு நடத்த முடியாது என்று உணர்ந்து விமர்சனத்தில் சூட்டை தணித்துக்கொண்டதாக கிசுகிசுக்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X