அந்த நடிகையுடன் புருஷனை நடிக்க வச்சது தப்பா போச்சு.. நைட் எல்லாம் ஆள் எஸ்கேப்.. புலம்பும் மனைவி?
சென்னை: சமீப காலமாக அந்த பிரபல நடிகர் இரவு நேரத்தை குடும்பத்துடனும் குறிப்பாக மனைவியுடன் செலவு செய்யாமல் டப்பிங் இருக்கு, எடிட்டிங் இருக்கு ஸ்டூடியோவுக்குப் போகிறேன் என காரை எடுத்துக் கொண்டு ஈசிஆரில் உள்ள ஸ்டார் ஹோட்டலுக்கு பறந்து விடுகிறார் என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
நடிகர் தன்னை நல்லா பார்த்துக் கொண்டாலும், வசதியாக வைத்துக் கொண்டாலும் ராத்திரி நேரத்தில அவர் நடந்துக் கொள்வதை பார்த்தால் மனைவிக்கு ரொம்பவே கடுப்பாக வருகிறதாம்.

வேவு பார்க்க வைத்த ஆட்களையும் நடிகர் பணத்தால் அடித்து கரெக்ட் செய்துவிட மனைவிக்கு சரியான ஆதாரம் இல்லாமல் நடிகரிடம் இதுபற்றி நேருக்கு நேர் கேட்க முடியாமல் தவித்து வருகிறார் என பேச்சுக்கள் புகைந்து வருகின்றன.
ராத்திரியில் எஸ்கேப் ஆகும் நடிகர்: காலையில் எல்லாம் கோயிலுக்கு கூட்டிச் செல்வது, குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடுவது என குடும்ப தலைவனாக ஷூட்டிங் இல்லாத நாட்களில் இருக்கும் அந்த நடிகர், இரவு நேரம் ஆனால், மட்டும் ஆள் எஸ்கேப் ஆகிவிடுகிறாராம். எடிட்டிங்கில் கரெக்ஷன் பார்க்கணும், டப்பிங் இருக்கு, அடுத்த படத்துக்கான மீட்டிங் இருக்கு என ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி மனைவியை சமாளித்து வருகிறார் என்கின்றனர்.
அந்த நடிகையுடன் தான் பழக்கம்: கடைசியாக தனது கணவருக்கு அந்த ஸ்லிம் ஹீரோயினை புக் செய்தது தான் தவறாக போய்விட்டதா என மனைவிக்கு ஒரே தலைவலியாக உள்ளதாக கூறுகின்றனர். அடிக்கடி அந்த நடிகை தான் கணவரிடம் பேசுகிறார் என்றும் அவருடன் தான் ரகசியமாக ரெசார்ட் மற்றும் நட்சத்திர ஹோட்டலுக்கு நைட் டேட்டிங் கிளம்பிவிடுகிறார் ஹீரோ என சில தோழிகள் மனைவியின் காதை கடித்து வருவது தான் அவருக்கு பெரும் வேதனையாக மாறியுள்ளதாக கூறுகின்றனர்.
நேரடியாக கேட்டால் அவ்வளவுதான்: தன்னையும் தனது குழந்தைகளையும் நடிகர் நல்லாவே பார்த்துக் கொள்வதால், மனைவி அதிகமாக நடிகரின் விஷயத்தில் தலையிடுவதில்லையாம். ஒருவேளை சந்தேகமாக கேட்க ஆரம்பித்தாலே நடிகர் டென்ஷன் ஆகி சண்டை போட்டு விடுகிறாராம். நேரடியாக கேட்டு விட்டால் விவாகரத்து வரை போய் விடுமோ என அஞ்சி மனைவி சைலன்ட் மோடில் இருக்கிறாராம். அதே சமயத்தில் நடிகரை கையும் களவுமாக பிடிக்க சில ஏற்பாடுகளையும் சீக்ரெட்டாக செய்து வருகிறார் என பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.


Click it and Unblock the Notifications











