ஏன்யா படத்தை ரிலீஸ் பண்ணல?: தயாரிப்பாளருக்கு டோஸ் விட்ட பெல் நடிகர்
சென்னை: பெல் நடிகர் தான் பல காலம் கழித்து நடித்துள்ள படம் ரிலீஸாவதில் காலதாமதம் ஆவதால் தயாரிப்பாளரை விளாசித் தள்ளிவிட்டாராம்.
பல காலம் நடிக்காமல் இருந்த பெல் நடிகர் மீண்டும் நடிக்க வந்தார். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து மீண்டும் வாக்குறுதிகளை அள்ளி வழங்கும் அரசியல்வாதிகளுக்கு மக்களை ஓ போடுமாறு கூறும் கதையில் அவர் நடித்திருந்தார்.
படப்பிடிப்பு எல்லாம் பரபரவென நடைபெற்றது. ஆனால் படம் மட்டும் இன்னும் ரிலீஸான பாடில்லை. பெல் நடிகரின் படம் முடியும் தருவாயில் தயாரிப்பாளர் வேறு ஒரு படத்தை வெளியிட்டார். அந்த படத்தை வாங்கி வெளியிட்டதில் பெரிய தொகை செலவானதால் பெல் படத்தை ரிலீஸ் செய்வதில் ஆர்வம் காட்டவில்லையாம்.
இதை பார்த்து கடுப்பான பெல் நடிகர் கதை பிடித்துப் போய் தான் நடிக்காமல் இருந்த தான் மறுபடியும் நடிக்கவே வந்தேன். நீங்கள் என்னவென்றால் இப்படி ரிலீஸ் பண்ணாமல் இருக்கிறீர்களே என்று கூறி தயாரிப்பாளரை விளாசித் தள்ளிவிட்டாராம்.


Click it and Unblock the Notifications










