கணவரை விவாகரத்து செய்கிறார் பூமிகா!

By Shankar

Bhumika
பிரபல இந்தி நடிகை பூமிகா, தனது கணவரை விவாகரத்து செய்கிறார். விவாகரத்துக்கான மனுவை அவர் சமீபத்தில் மும்பை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

தமிழில் பத்ரி படம் மூலம் அறிமுகமானவர் பூமிகா. தொடர்ந்து ரோஜாகூட்டம், ஜில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது பிரபுதேவாவுடன் களவாடிய பொழுதுகள் படத்தில் நடித்து வருகிறார்.

இந்தியில் பூமிகா சாவ்லா என்ற பெயரில் இவர் பிரபலம். இவருக்கும் யோகா மாஸ்டர் பரத் தாகூருக்கும் 2007-ல் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

விவாகரத்து செய்து பிரிய முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பூமிகாவும், பரத் தாகூரும் இணைந்து தயாரிப்பு கம்பெனி துவங்கி 'தகிட தகிட' என்ற படத்தை எடுத்து வெளியிட்டனர். இப்படம் படுதோல்வி அடைந்தது. இதில் பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

பரத் தாகூர்தான் படம் தயாரிக்கும்படி பூமிகாவை நிர்ப்பந்தித்தாராம். துபாயில் இருவரும் யோகா ஸ்கூல் ஒன்றை துவங்கினர். இதற்காக பெரும் தொகை செலவிட்டார்களாம். ஆனால் எதிர்பார்த்த அளவு கூட்டம் வரவில்லை. இதிலும் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து கணவரால் பெரும் நஷ்டம் வந்ததால் கடுப்பான பூமிகா, கணவருக்கு குட்பை சொல்லும் மூடுக்கு வந்துவிட்டாராம்.

இதன் விளைவு, இப்போதிலிருந்தே பிரிந்துவாழ ஆரம்பித்துள்ளார்களாம். தனது பெற்றோருடன்தான் பூமிகா வசிப்பதாகவும், கணவர் பரத் தாகூர் தனியாக வசிப்பதாகவும் உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் விருந்து நிகழ்ச்சிகளுக்கு, படம் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு முன்பெல்லாம் கணவருடன் வந்து கொண்டிருந்த பூமிகா, இப்போது தனியாகவே வருகிறார்.

வக்கீல்களுடனும் ஆலோசனை நடத்திய பின்னர் சமீபத்தில் தனது விவாகரத்து மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X