பெரிய முதலையிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் சின்ன மீன்கள்.. பேராசை பெருநஷ்டமாகிடுச்சே!
சென்னை: அந்த பிரபல நடிகரிடம் சிக்கி பல சிறிய நடிகர்கள் சின்னா பின்னாமாக போகிறார்களோ என்கிற அச்சம் தான் தற்போது கோடம்பாக்கத்தில் பேசு பொருளாக மாறியிருக்கிறது. அந்தளவுக்கு பல யங் டேலண்ட் எல்லாம் வந்து வசமாக முதலையின் வாய்க்குள்ளே வந்து விழுந்திருப்பதாக ஷாக் கொடுக்கின்றனர்.
திறமை வாய்ந்த பழுத்த மரம் என்பதால் அதை நம்பி பலரும் அதனுடன் இணைந்து பயணம் செய்ய நினைத்து பல்பு வாங்கியது தான் மிச்சம் என பதறிப் போய் கதறி வருவதாக சினிமா வட்டாரத்தில் பலரும் சிரிப்பை அடக்கிக்கொண்டு பேசி வருகின்றனர்.

ஸ்டார் நடிகர் மல்டி ஸ்டார்களை கூட்டணிக்கு வைத்து ஹிட் கொடுக்கிறாரே, இவருடன் நாமும் கூட்டணி சேர்ந்தால் ஃபியூச்சர் ரொம்ப பிரைட்டா இருக்கும் என விட்டில் பூச்சிகளாக மாறி பல வருடங்களை சில திறமை வாய்ந்த சினிமா பிரபலங்களே தொலைத்து வருவதாக பகீர் கிளப்புகின்றனர்.
பேராசை பெரு நஷ்டம்: அத்தி பூத்தது போல அந்த அதிரடி இயக்குநர் தயவால் பல ஆண்டுகளுக்குப் பிறகு பாஸ் நடிகருக்கு ஒரு நல்லது நடந்தது. அதை வைத்து ஓராயிரம் லாபத்தை அவர் அறுவடை செய்திருப்பதாக ஆச்சர்ய தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகரின் விசிறிகளாக இருந்த பல பிரபலங்கள் இந்த படகில் ஏறி சவாரி செய்யலாம் என ஏறிய நிலையில், நங்கூரத்தை நச்சுன்னு நடுக்கடலில் போட்டு விட்டு அந்த பாஸ் நடிகர் தனக்கு பீஸ் வர வேலைகளை மட்டும் பார்த்து வருகிறாராம்.
சிக்கிய சின்ன மீன்கள்: வசமா சிக்கிட்டோம் என்பதை புரிந்துக் கொண்ட நிலையில், தப்பிக்க நினைத்த சிறு மீன்கள் தாங்கள் சிக்கியது வலையில் அல்ல, முதலை வாயில் என்பதை அறிந்துக் கொண்டு என்ன செய்வது ஏது செய்வது என்றே புரியாமல் புலம்பித் தவித்து வருவதாக கோடம்பாக்கத்தில் பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமாக புகையத் தொடங்கி உள்ளன.
பிரச்சனை வெடிக்கும்: நடிகரை நம்பி தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள் மட்டுமின்றி பக்கத்து தேசத்தில் இருந்து வந்த கலைஞர்களும் இப்போது பக்காவாக சிக்கி பரிதவித்து வருவதாக கூறுகின்றனர். எந்தளவுக்கு எல்லாரையும் லாக் செய்து வைக்க முடியுமோ அந்தளவுக்கு லாக் செய்து விட்டாராம் பாஸ் நடிகர். ஆனால், லாபம் பார்க்க வந்தவர்களின் நிலை தற்போது ஆளை விட்டால் போதும்டா சாமி என்கிற அளவுக்கு மாறிவிட்டதாக கூறுகின்றனர். ஒரு சிலர் இப்போதே முணங்கத் தொடங்கிவிட்ட நிலையில், விரைவில் அந்த நடிகருக்கு எதிராக பெரிய பிரச்சனை வெடிக்கும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











