»   »  அவர் கூட நடிக்கற நீங்க என்கூட நடிச்சா என்ன? நம்பர் நாயகிக்கு கொக்கி போட்ட காமெடி!

அவர் கூட நடிக்கற நீங்க என்கூட நடிச்சா என்ன? நம்பர் நாயகிக்கு கொக்கி போட்ட காமெடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பரோட்டாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் சர்ச்சை நடிகை என்று கிளப்பி விட்டவர்களை வலைவீசித் தேடிக்கொண்டிருக்கிறார் சர்ச்சை நடிகை. காரணம் ஆளாளுக்கு டார்ச்சர் கொடுப்பதுதான்... சாண்டல் நடிகர் கூட அந்த லிஸ்டில் சேர்ந்துவிட்டார்.

சர்ச்சை நடிகை லீட் ரோல்களில் மட்டும் நடிப்பது என்றும் சம்பளம் இனிமேல் 7 கோடி என்றும் அதிரடிகள் காட்டத் தொடங்கிய நேரத்திலா இப்படி ஒரு செய்தி வரவேண்டும்?

மார்க்கெட்டில் இருந்தாலும் சிரிப்பே வரவழைக்கத் தெரியாமல் ஒப்புக்கு சப்பாணியாக நடித்துக்கொண்டிருக்கும் பரோட்டாவுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார் என்று எந்த புண்ணியவானோ கிளப்பி விட்டுவிட்டார். நடிகை இதுவரை ஜோடியாக நடிக்காமல் ஒதுக்கி வைத்த நடிகர்கள் எல்லாம் நடிகையை மொய்க்க தொடங்கிவிட்டார்களாம். சாண்டல் காமெடி நேரடியாகவே தன் படத்தில் நடித்தால் என்ன? என்று கேட்டாராம்.

எல்லோருக்கும் நடிகை சொன்ன பதில்... 'சீக்கிரமா சொல்றேன்' என்பதுதான். லீட் ரோலில் நடிக்கும் படங்களின் ரிசல்ட்டை பொறுத்தவாறே நடிகையின் பதில் இருக்கும்.

English summary
After saw a rumour on big actress - parotta combination, most of the actors starting to inquire the actress and extending their offers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil