லவ் பண்றேன்... ஆனா ஜோடியா நடிக்க மாட்டேன்... இது என்னப்பா புதுசா இருக்கு?
பெரிய முதலாளி நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நடிகைதான் இப்படி ஒரு கண்டிஷன் வைக்கிறாராம்.
நிகழ்ச்சியில் ஒரு சின்ன நடிகரை ஒருதலையாக காதலித்து அவரால் ஏமாற்றப்பட்டு அதனால் ஏற்பட்ட கவலையோடு வெளியேறினார் நடிகை. அதுதான் நடிகைக்கு பெரிய புகழைத் தந்தது. இப்போது நிகழ்ச்சி முடிந்த பிறகு நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்குமே புதிய படங்கள் கமிட் ஆகின்றன.

அந்த நடிகரையும் இந்த நடிகையும் ஜோடி சேர்த்தால் நல்ல ஹிட் பார்க்கலாம் என்று கதைகளை வைத்துக்கொண்டு ஒரு கும்பல் சுற்றுகிறது.
நடிகர் ஓகே என்று சொல்லிவிட்டாராம். ஆனால் நடிகை அவருடன் நடிக்க மாட்டேன் என்று சொல்லி வருகிறாராம். ஆனால் காதலிப்பதாக மட்டும் சொல்லி வருகிறார்.
ஒருவேளை பெரிய அமவுண்டுக்காக காத்திருக்கிறாரோ?


Click it and Unblock the Notifications











