பிரைட் நடிகரை விடாமல் துரத்தும் பிரம்மாண்ட இயக்குநர்.. மனைவி இந்த பக்கம் வராம இருக்க காரணமே அதுதானா?

By Staff

சென்னை: கணவர் ரொம்ப நாள் கழித்து சந்தோஷமாக ஒரு விழாவை நடத்த அதற்காக கூட சென்னைக்கு வரமாட்டேன் என அடம்பிடித்துக் கொண்டு வேற ஸ்டேட்டிலேயே மனைவி நடிகை இருக்க காரணமே பிரம்மாண்ட இயக்குநர் தான் என்கிற புது பஞ்சாயத்தை கோடம்பாக்கத்தில் கிளம்பியிருக்கிறது.

மனைவிக்கும் கணவர் வீட்டுக்கும் இடையே தான் பெரிய சண்டை நடந்து அதன் காரணமாகத்தான் அவர் சென்னை பக்கமே தலை வைத்து படுக்கமாட்டேன் எனக் கூறிவிட்டார் என பேச்சுக்கள் அடிபட்டு வந்த நிலையில், அதெல்லாம் உண்மையான காரணம் இல்லை என்றும் வேறொரு பஞ்சாயத்தில் மனைவி சிக்கிக் கொண்ட நிலையில் தான் வர மறுக்கிறார் என்கின்றனர்.

Big Budget Director keenly follow Popular Actor who gives hit recently

நடிகரின் மனைவி வரவில்லை என்றாலும் அந்த பிரம்மாண்ட இயக்குநர் நேரடியாக பிரைட் நடிகரையே ஃபாலோ செய்ய ஆரம்பித்துவிட்டார் எனக் கூறுகின்றனர்.

ஃபிளாப்பான பிரம்மாண்டம்: பல ஆண்டுகளாக பிரம்மாண்ட இயக்குநராக கெத்துக் காட்டி வந்த அந்த இயக்குநர் கடந்த சில ஆண்டுகளாக சரக்கு இல்லாமல் சுமார் மூஞ்சி குமாரு படங்களை கொடுத்து வந்த நிலையில், கடைசியில் ஒரு சொதப்பல் குமாரை இறக்க அவரது சாம்ராஜ்யம் மொத்தமாக சரிந்து விட்டது. எப்படியாவது நாமும் ஒரு வரலாற்று படத்தை எடுத்து அந்த பக்கத்து ஸ்டேட் பிரம்மாண்டத்துக்கு போட்டியாக மாற வேண்டும் என்கிற முயற்சியில் இருந்த இயக்குநருக்கு எந்தவொரு முன்னணி நடிகரும் தயாரிப்பாளர்களும் தலையை ஆட்ட மாட்டோம் என மஞ்சத் தண்ணி தெளித்த ஆடுபோல இருப்பதாக கூறுகின்றனர்.

கோர்த்துவிட்ட மனைவி: மாஸ் நடிகர் பிரம்மாண்ட இயக்குநர் படத்தில் நடிப்பதற்கு முன்னதாகவே அந்த படத்தில் தனது கணவரை நடிக்க வைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்ததே மனைவி நடிகை தானாம். ஆனால், அப்போது அந்த கனவு நிறைவேறாத நிலையில், இந்த வரலாற்று படத்தின் பேச்சுக்கள் அடிபட்ட போதே தனது கணவரை வைத்து படம் பண்ணுங்க கால்ஷீட் வாங்கித் தரேன் என மனைவி சொன்ன நிலையில் தான் தற்போது இந்த பக்கமே அவர் வராமல் பிரம்மாண்டத்திடம் சிக்கிவிடக் கூடாது என சிட்டாக பறந்து வருகிறாராம்.

பிரைட் நடிகருக்கே கொக்கி: பிரைட் நடிகரின் பிரம்மாண்ட படம் தோல்வியை தழுவிய நிலையில், அந்த இயக்குநரும் இவரெல்லாம் இனிமேல் செட்டாக மாட்டார் என சில காலம் சைலன்டடாக இருந்த நிலையில், சமீபத்தில் வெளியான அந்த பழைய படம் இயக்குநருக்கு ரொம்பவே பிடித்துப் போய்விட்டதாம். அந்த படம் லாபகரமான படமாக மாறிய நிலையில், மீண்டும் நடிகருக்கு மார்க்கெட் அதிகரிக்கும் என்பதை கணித்து மீண்டும் தனது வரலாற்று படத்தை உருவாக்கும் முயற்சியில் நேரடியாக பிரைட் நடிகருக்கே கொக்கிப் போட்டுள்ளார் என பேச்சுக்கள் புகையத் தொடங்கியுள்ளன.

3ம் பாகத்துக்கும் அடிக்கல்: 2வது பாகமே போதும்டா சாமி என ரசிகர்களை கூற வைத்த நிலையில், எப்படியாவது 3ம் பாகத்தை முடித்து வெளியிட வேண்டும் என்கிற முயற்சியிலும் தயாரிப்பாளர் தலையில் மசாலா தடவி வருகிறாராம் இயக்குநர். எப்படியும் மீண்டும் தனது திறமையை நிரூபிக்க இயக்குநர் முயற்சித்து வரும் நிலையில், எல்லாம் நல்லதாகவே நடந்து அவரும் கம்பேக் கொடுத்தால் நல்லாத்தான் இருக்கும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X