மீண்டும் பழைய முதலாளி காலிலேயே போய் விழுந்த பெரிய பட்ஜெட் ஹீரோ.. பார்த்து ஏதாவது செய்வாரா?
சென்னை: பிரம்மாண்ட இயக்குநர் படத்தில் நடித்ததன் மூலமாகத்தான் பெரிய நட்சத்திர அந்தஸ்த்தே நமக்கு கிடைத்தது என்பதையே மறந்து விட்டு பான் இந்தியா ஸ்டாராக வலம் வந்த அந்த பெரிய பட்ஜெட் நடிகருக்கு தொடர்ந்து தோல்விமுகமாகவே அமைய மீண்டும் தனது பழைய ஹிட் கொடுத்த முதலாளி பக்கமே திரும்பி உள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
அந்த பெரிய இயக்குநர் இயக்கத்தில் நடிக்கும் நடிகர்களின் படங்கள் சூப்பர் ஹிட் அடித்து வரும் நிலையில், அதே ஹீரோக்கள் அதற்கு பின் மற்ற இயக்குநர்கள் படங்களில் நடித்தால் பெரிதாக ஷைன் ஆவதில்லை என்கிற நிலை சமீப காலமாக உருவாகி இருக்கிறது.

ஒரு பெரிய படம் ஹிட் கொடுத்த நிலையில், அடுத்தடுத்து மற்ற இயக்குநர்களின் வாய்ப்பு, பாலிவுட் அழைப்பு, நூறு கோடிக்கும் மேல் சம்பளம் என்றதும் குஷியாக புறப்பட்ட அந்த ஹீரோ தனது இமேஜ் டோட்டலாக டேமேஜ் ஆன நிலையில், தனது ரசிகர்களுக்காக எப்படியாவது ஒரு ஹிட் கொடுக்க அந்த இயக்குநரிடம் கெஞ்சி உள்ளாராம்.
இயக்குநருக்கு பெரிய ஐஸ்: பெரிய பட்ஜெட் படங்களில் நடித்தாலே படம் ஹிட் ஆகிவிடும் என தப்புக் கணக்கு போட்டு இயக்கவே தெரியாத இயக்குநர்களிடம் சிக்கித் தவித்து சின்னாபின்னமாகி வருகிறார் அந்த பெரிய பட்ஜெட் ஹீரோ.
ஹீரோவின் கால்ஷீட்டை இயக்குநர்கள் பிடித்து விட்ட நிலையில், தயாரிப்பாளர்களும் பல நூறு கோடிகளை தண்ணீர் போல நம்பி செலவழித்தும் கடைசியில் ஒன்றுக்கும் உதவாமல் கடனாளியாகவே மாறி வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் வெளிநாட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அடுத்த படத்திற்கான ப்ரமோஷன் செய்யும் போது தனது பழைய முதலாளிக்கு நடிகர் பெரிய ஐஸ் வைத்துள்ளாராம்.
சரணாகதியடைந்த நடிகர்: சாமி படங்களில் நடித்து கல்லா கட்டி விடலாம் என மனக் கணக்கு போட்ட நடிகரின் கல்லா பெட்டியில் களிமண் வந்து விழுந்த நிலையில், மீண்டும் ஒரு பெரிய ஹிட்டுக்காக, உங்க படத்தில் ஒரு ஓரமா சின்ன ரோல் இருந்தால் கூட கொடுங்க நான் நடிக்கிறேன் என கேட்டிருக்கிறாராம்.
இப்போதைக்கு அடுத்தடுத்து இரு பெரிய நடிகர்கள் படங்களில் தான் பிஸி என்றும் 5 ஆண்டுகளாவது ஆகும் என அந்த இயக்குநர் நடிகருக்கு பெரிய அல்வாவை பார்சல் செய்திருக்கிறார்.
அந்த படம் தான் டார்கெட்: பிரம்மாண்ட இயக்குநரின் கனவு படமான அந்த பெரிய இதிகாசப்படத்தில் எப்படியாவது நாம் ஹீரோவாக நடித்து விட வேண்டும் என்கிற நோக்கத்திலேயே இந்த நடிகர் சரியான நேரத்தில் காய் நகர்த்தி உள்ளார் என்றும் இயக்குநர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும் என தகவல்கள் கசிந்துள்ளன.


Click it and Unblock the Notifications











