உன்னால நான் கெட்டேன்.. என்னால நீ கெட்ட.. அப்பாவை காண்டாக்கிய பிரம்மாண்டம் மகள்.. அச்சச்சோ?
சென்னை: நெப்போடிசத்துக்கு ஒரு சிறந்த உதாரணமாக பிரம்மாண்டத்தின் மகள் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் நெப்போடிசம் மூலம் அறிமுகம் ஆனாலும், சரியான திறமை இல்லாமல் வெறும் கிரிஞ்ச் மட்டுமே இருந்தால் கூடிய சீக்கிரத்தில் எக்ஸ்போஸ் ஆகிடுவாங்க. அந்த நிலைமைக்குத்தான் தற்போது பிரம்மாண்டம் மகள் தள்ளப்பட்டுள்ளாராம்.
சினிமாவில் இருந்து தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வரும் அந்த யங் ஹீரோயின் தனக்கு வாய்ப்புகள் அமையாமல் போனதற்கு காரணமே அப்பாதான் என அவரிடம் வீட்டில் சமீபத்தில் சண்டைப் பிடித்து விட்டார் என்கிற திடுக்கிடும் கிசுகிசு ஒன்று கிளம்பி உள்ளது.

பதிலுக்கு நடிகையின் அப்பா அவரை திட்டியது தான் ஹைலைட் என கிளம்பியுள்ள பேச்சுக்கள் தான் தற்போது கோடம்பாக்கத்தில் டீ கடைகளில் கேஸ் சிலிண்டர் இல்லாததால் சூடாக விற்பனை ஆகி வருகிறது என்கின்றனர்.
வாம்மா மின்னல் கதை தான்: மாயி படத்தில் பொண்ணு பார்க்க வரும் போது வாம்மா மின்னல் என அழைத்ததும் பொண்ணு மின்னல் வேகத்தில் வந்து செல்வதை போலத்தான் பிரம்மாண்டத்தின் மகள் சினிமாவில் ஹீரோயினாக சில படங்களில் மட்டுமே நடித்து தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் ரெஸ்ட்டில் இருக்கிறார் என்கின்றனர். மேலும், சமீபத்தில், அந்த நடிகையை ஒதுக்கிவிட்டு அவர் நடித்த படத்திலேயே இன்னொரு ஹீரோயினை புரமோட் செய்தது பெரும் பரபரப்பை கிளப்பியது.
அப்பாவுடன் சண்டை: ஒழுங்கா வேறு தொழிலை பார்க்க அப்பா அறிவுறுத்தினாலும் அவர் பேச்சைக் கேட்காமல் அடம்பிடித்து மகள் வந்த நிலையில், அதை சொல்லி அப்பா கலாய்க்க, வீட்டில் சண்டை வெடித்து விட்டது எனக் கூறுகின்றனர். அப்பாவின் படங்கள் சமீப காலமாக சொதப்பியது தான் தன்னுடைய மார்க்கெட் காரணம் என்று பதிலுக்கு மகள் வாய் துடுக்காக பேச வீட்டுக்குள் பெரிய சண்டையே நடந்துவிட்டது என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
கோபத்தில் நடிகை: எப்படியாவது விட்ட இடத்தை பிடித்து விட வேண்டும் என நடிகை கோபத்தில் உள்ளாராம். நல்ல நல்ல கதைகளையும், இயக்குநர்களையும் சந்தித்து டிஸ்கஷன் செய்து வருகிறார் என்றும் சீக்கிரமே கம்பேக் கொடுத்து அப்பா முகத்தில் கரியை பூச வேண்டும் என ஒற்றைக்காலில் நிற்கிறாராம். வீட்டில் புலம்பிக் கொண்டிருந்த மகளை பிகில் விஜய் ஸ்டைலில் கடுப்பாக்கி கொளுத்திப்போட்டதும் நல்லதுக்குத்தான் என அப்பா ஹேப்பியாகி உள்ளார் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











