பெரிய அப்செட்டில் பிரம்மாண்ட இயக்குநர்.. இந்த ஹீரோவையும், வில்லனையும் வச்சிக்கிட்டு ஒரே கஷ்டமப்பா?
ஹைதராபாத்: பிரம்மாண்ட இயக்குநரின் புதிய படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், எப்படியாவது படம் வெளியாவதற்கு முன்னதாகவே போட்ட காசை மொத்தமும் வசூல் செய்துவிடும் பில்டப் வேலைகளை ஆரம்பித்து விட வேண்டும் என்கிற முடிவில் இருக்கிறாராம்.
இதுவரை தான் எடுத்த படங்களில் ஹாலிவுட் பட பாதிப்புகள் இருந்தாலும், அதனை ரசிகர்கள் ரொம்பவே ரசிக்கும் படி கொடுக்க முக்கிய காரணமே அந்த படத்தில் நடித்த நடிகர்கள் தான். ஆனால், இந்த முறை இயக்குநருக்கு வாய்த்த ஹீரோவும், வில்லனும் அவரது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவே இல்லை என இயக்குநர் ரொம்பவே ஃபீல் பண்ணி உள்ளாராம்.

படம் வெளியான பிறகு பாக்ஸ் ஆபீஸில் பெரிய கல்லா கட்டுமா என்பது சந்தேகம் தான் என்கிற டவுட்டு வரவே அதற்கு முன்னதாக படத்தை வியாபாரம் செய்யும் முயற்சியில் தீயாக செயல்பட்டு வருகிறாராம் அந்த பிரம்மாண்டம்.
பல கோடி கொட்டி: எப்படியாவது இந்த ஹீரோவையும் பான் இந்தியா ஹீரோவாக உயர்த்தி விட வேண்டும் என்கிற வேலை தனக்கு வந்த நிலையில், பல கோடி ரூபாய் கொட்டி பெரிய பட்ஜெட்டில் படத்தை இயக்கியுள்ளாராம் அந்த பிரம்மாண்ட இயக்குநர். ஆனால், படம் அவர் நினைத்தது போல வரவில்லை என்றும் குறிப்பாக ஹீரோ மற்றும் வில்லன் என முக்கியமான விஷயமே இயக்குநருக்கு பெரிய அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
டிரையல் பார்த்த இடத்திலேயே அடி: ஹீரோவை விட கண்டிப்பாக வில்லன் கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்துவிட்டால் கூட தப்பித்து விடலாம் என நினைத்து முதலில் வில்லனை அறிமுகப்படுத்தி ஓவர் பில்டப் கொடுத்த இயக்குநருக்கு கிடைத்தது மிகப்பெரிய பல்பு தான் என்கின்றனர். விரைவில் நடைபெற உள்ள அறிமுக விழா மூலமே பல கோடி ரூபாயை சம்பாதித்து விட வேண்டும் என இயக்குநர் தற்போது படத்தை பிசினஸ் பண்ணுவதில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறாராம்.
லாபம் தான் முக்கியம்: கடந்த படத்தை போல இந்த படத்தை வைத்துக் கொண்டு விருது விழாக்களில் எல்லாம் போட்டியிட முடியாது என்றும் வந்த வரை லாபம் என ரசிகர்களை ஆரம்பத்திலேயே ஏமாற்றி எந்தளவுக்கு முதல் வார வசூலை வசூல் செய்துவிட முடியுமோ அதற்கு முக்கியத்துவம் கொடுக்கலாம் என்கிற நிலைக்கே இயக்குநர் சென்றுவிட்டதாக பேச்சுக்கள் புகையத் தொடங்கியுள்ளன.


Click it and Unblock the Notifications











