உன்னால நான் கெட்டேன்.. என்னால நீ கெட்ட.. ஃபிளாப்பான படம்.. மாறி மாறி குறை சொல்லிக்கிறாங்களாம்!

By Staff

சென்னை: அப்பாவை வைத்து மகள் இயக்கிய விளையாட்டு படம் சமீபத்தில் வெளியாகி தோல்வியை தழுவிய நிலையில், இயக்குநருக்கும் அந்த படத்தில் நடித்த நடிகருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாக பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன. மேலும், தயாரிப்பாளர்கள் மத்தியிலும் சண்டை வெடித்து இருப்பதாகவும் பேசிக் கொள்கின்றனர்.

உச்ச நடிகரை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்ட படத்திற்கு புரமோஷன்களையும் அவரையும் அவரது முகத்தையும் தான் காட்டி முடிந்த வரை தயாரிப்பு நிறுவனமும் சரி இயக்குநரும் சரி புரமோஷன் செய்தனர்.

Big fight between lady director and hero gossip trending in kollywood


ஆனால், கடைசி நேரத்தில் இயக்குநர் தேவையில்லாமல் வாய் விட்டது படத்துக்கு பப்ளிசிட்டியாக மாறாமல் நெகட்டிவிட்டியாக மாறிவிட்டது என்கின்றனர். மேலும், படத்தில் அவரது பங்களிப்பு சுமார் ரகத்தை விட மோசம் என்பதால் தான் படம் எடுபடவில்லை என கோடம்பாக்கம் முழுவதும் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

சரியா புரமோஷன் பண்ணல: ஆனால், தன் மீது எந்தவொரு தவறும் இல்லை என்றும் தயாரிப்பு நிறுவனம் சரியாக புரமோஷன் செய்யாதது தான் படத்திற்கு தோல்வியை தந்திருக்கிறது என இயக்குநர் தன் மீது விழும் குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் மற்றவர்களின் மீது பழியை தூக்கிப் போட்டு வருவதாக சொல்கின்றனர். இந்த படத்துக்காக பல மாதங்கள் வீணடித்து விட்டு பல பேரது மார்க்கெட்டையும் அந்த இயக்குநர் காலி செய்து விட்டார் என்றே பகீர் கிளப்புகின்றனர்.

ஹீரோ அப்செட்: வாரிசு ஹீரோவை ஓரங்கட்டி விட்டு வான்டட்டாக வந்து வண்டியில் ஏறிய அந்த ஹீரோ தற்போது அடுத்தடுத்து தனக்கு கிடைக்க வேண்டிய படங்கள் எல்லாம் கைமீறி போய் விட்டது என்றும் சம்பளத்தில் கை வைக்கவும் தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளார்கள் என்பதும் தெரிந்த நிலையில், ரொம்பவே அப்செட் ஆகி விட்டாராம்.

இயக்குநருடன் சண்டை: படத்தின் தோல்விக்கு காரணமே நீங்க தான் என இயக்குநருடனே நேரடியாக சண்டை போட்டுள்ளார் அந்த ஹீரோ என பகீர் தகவல்கள் லீக் ஆகி உள்ளன. பெரிய நடிகருடன் இணைந்து நடித்தால் நம்முடைய மார்க்கெட் மேலும், உச்சத்துக்கு செல்லும் என நினைத்த நடிகருக்கு எல்லாமே மாறிப் போன நிலையில், அதிருப்தியில் தனக்கு வெற்றி கொடுத்த இயக்குநருடன் மீண்டும் தஞ்சம் அடைந்திருக்கிறார் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X