»   »  சர்ச்சை நாயகி படம் ஃப்ளாப்.. கொண்டாடும் ஹீரோக்கள்!

சர்ச்சை நாயகி படம் ஃப்ளாப்.. கொண்டாடும் ஹீரோக்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சர்ச்சை நாயகி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் தோல்வியைடைந்ததால் நடிகை படு அப்செட்டில் இருக்கிறாராம். நடிகையை விட நடிகையின் சிவனான காதலர் இன்னும் அப்செட்டில் இருக்கிறார்.

சர்ச்சை நாயகிக்கு தனியாக ஒரு மார்க்கெட் உருவான பிறகு பெரிய ஹீரோக்களுடன் ஜோடியாக நடிப்பதை விட்டுவிட்டு முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் மட்டும் நடிக்கத் தொடங்கினார். தன்னை அணுகும் ஹீரோக்களையும் அவமானப்படுத்தினார். இதனால் எல்லா ஹீரோக்களுமே காண்டில் இருந்தார்கள்.

சமீபத்தில் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான நாயகியின் பேய் படம் தோல்வியடைந்தது. எனவே அவமானப்படுத்தப்பட்ட பெரிய ஹீரோக்கள் பார்ட்டி வைத்துக் கொண்டாடுகிறார்களாம்.

படத் தோல்வியால் காதலர் அப்செட் ஆனதற்கு காரணம்... எங்கே திரும்ப ஹீரோக்களுடன் ஜோடி போடத்தொடங்கி விடுவாரோ.. நம்ம இடம் ஆட்டம் கண்டுவிடுமோ என்பதுதானாம்...

அவர் கவலை அவருக்கு...!

Read more about: gossip, கிசுகிசு
English summary
Big number actress boy friend worried about the flop of her latest horror movie

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil