பெரிய நடிகர்களுடன் நடிக்கணும்.. இளம் இயக்குநர்களுக்கு ‘பார்ட்டி’ கொடுத்து அசத்தும் நடிகை
பெரிய நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்பதற்காக இளம் இயக்குநர்களுக்கு பார்ட்டி கொடுத்து அசத்தி வருகிறார் இந்த நடிகை.
சென்னை : பெரியவீட்டுக்குப் போனதன் மூலம் பிரபலமான நடிகை அவர். கிடைத்த புகழை அப்படியே படவாய்ப்புகளாக மாற்றப் போராடி வருகிறார். இதற்காக இளம் நடிகர்களுக்கு வாராவாரம் பார்ட்டி கொடுத்து வருகிறார்.
திருட்டுக்காரன் படத்தில் அறிமுகமானவர் இந்த நடிகை. அடுத்தடுத்து கிடைத்த வாய்ப்புகள் அழகு பொம்மையாக வந்து போகவே உதவின. இதனால் படவாய்ப்புகள் குறைந்து போனது.

அப்போது தான், பெரிய வீட்டுக்கு செல்லும் வாய்ப்பு நடிகைக்கு கிடைத்தது. அங்கு காதல், சண்டை, அழுகை, வெளிப்படையான பேச்சு என தன் நிஜ கதாபாத்திரத்தால் மக்களிடையே அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அரசியல்வாதிகளே பொறாமைப்படும் அளவிற்கு மக்களிடையே வாக்குகளைப் பெற்றார்.
இயக்குநர்களும் இவரது வீட்டுக் கதவைத் தட்ட, விட்ட மார்க்கெட்டை மீண்டும் பிடித்தார் நடிகை. ஆனபோதும், இம்முறை விரைவில் வீழ்ந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார். எனவே, மேல்தட்டு நடிகர்களுடன் நடிக்க வாய்ப்புகள் தேடி வருகிறார்.
இதற்காக பெரிய நடிகர்களுக்கு கதைகள் சொல்லிவிட்டு, காத்திருக்கும் இளம் இயக்குநர்கள் பக்கம் அவரது கவனம் திரும்பியிருக்கிறது. அவர்களுடம் நட்பு பாராட்டி வரும் நடிகை, அவ்வப்போது பார்ட்டிகளும் வைத்து அசத்தி வருகிறாராம்.


Click it and Unblock the Notifications











