ஏற்கனவே உடைச்சதெல்லாம் பத்தாதா.. மீண்டும் அந்த நடிகை வேணாம் என ஒல்லி நடிகருக்கு பறக்குது அட்வைஸ்!
சென்னை: மீண்டும் அந்த பாட்டு நடிகையுடன் ஜோடி சேர வேண்டாம் என ஒல்லி நடிகருக்கு பல தரப்பில் இருந்தும் அட்வைஸ் பறந்து வருகிறதாம்.
ஒல்லி நடிகரின் அடுத்த படம் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், மீண்டும் அவர் நடிகை ஒருவருடன் ஜோடி சேர உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
இந்நிலையில், திடீரென ரசிகர்களும் சினிமா வட்டாரத்தில் உள்ள நெருங்கிய நண்பர்களும் ஒல்லி நடிகருக்கு இப்படியொரு அட்வைஸ் கொடுத்துள்ளார்களாம்.

ஒரு ஹிட் ஒரு ஃபிளாப்
உலகளவில் கலக்கி வரும் அந்த ஒல்லி நடிகர் ஒரு ஹிட் படம் கொடுத்தால், கண் திருஷ்டி பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே இலவச இணைப்பாக ஒரு மொக்கைப் படத்தையும் கொடுக்கும் யுக்தியை தொடர்ந்து செய்து வருகிறார் என விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

அவரோட சாயல்
மேலும், ஒல்லி நடிகரின் ஒரிஜினாலிட்டியே நல்லா இருக்கும் நிலையில், ஏன் தேவையில்லாமல் மூத்த நடிகரின் சாயலை காப்பி அடித்து கெட்டப் பெயர் வாங்கிக் கொள்கிறார் என்றும் நெருங்கிய நண்பர்களே காது படக் கூறி வருகிறார்களாம்.

பக்கத்து மாநில இயக்குநர்
அடுத்ததாக அந்த நடிகர் பக்கத்து மாநில இயக்குநர் ஒருவரும் கைகோர்க்கப் போவது உறுதியாகி உள்ளது. தகவல்கள் வந்த செய்திகளை ஒல்லி நடிகரும் ஆமாம்ப்பா.. அவருடன் தான் நான் அடுத்து படம் பண்ணப் போகிறேன் என ஓப்பனாக ஒப்புக் கொண்டார்.

மீண்டும் அதே நடிகையா
ஏற்கனவே அந்த இயக்குநர் படங்களில் அந்த பாட்டு நடிகை நடித்துள்ள நிலையில், ஒல்லி நடிகரை வைத்து அவர் இயக்கவுள்ள புதிய படத்திலும் அதே நடிகையை ஒப்பந்தம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மீண்டும் அதே நடிகையா என ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர்.

ஏற்கனவே உடைச்சது போதாதா
ஒரே ஒரு பாட்டை தவிர முழு படமும் கொஞ்சம் கூட வொர்த் இல்லாமல் போனது. மீண்டும் அந்த நடிகையுடன் சேர்ந்து நடிச்சா விளங்கின மாதிரி தான் என்று பல இடங்களில் இருந்து ஒல்லி நடிகருக்கு எச்சரிக்கைகளும் ஃப்ரீ அட்வைஸ்களும் குவிந்து வருகிறதாம்.

என்ன முடிவு
ஒல்லி நடிகர் படத்தில் அந்த பாட்டு நடிகை தான் நடிக்கப் போகிறார் என்பது குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், அந்த நடிகையுடன் மீண்டும் நடிப்பதா? வேண்டாமா? என்ன முடிவை ஒல்லி நடிகர் எடுக்கப் போகிறார் என எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











