டாட்டா காட்டிய கோட்.. மாஸ் நடிகர் மனைவியை அரசியலுக்குள் இழுக்க மெகா பிளான்?.. சேம் பாஸ் நடிகர் ரூட்?
சென்னை: இந்த முறையும் அந்த பூ கட்சி விரியாத நிலையில், இதற்கு மேல் நம்ம டைமை வேஸ்ட் பண்ணக் கூடாது என்கிற முடிவை கோட் எடுத்து ஒட்டுமொத்தமாக டாட்டா காட்டிவிட்டார் என்கின்றனர். இந்நிலையில், இதற்கு எல்லாமே காரணகர்த்தாவாக சைலன்ட்டாக கேம் ஆடி வரும் மாஸ் நடிகரை மடக்க அவரது மனைவியை அரசியலுக்குள் கொண்டு வர பூ கட்சி காய் நகர்த்தி வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
சன் தான் எல்லாத்துக்கும் காரணம் என்று மாஸ் நடிகர் தொண்டை வலிக்க கத்தி பேசினாலும், அனைத்தையும் ஆட்டிப் படைத்து வருவது அந்த ஷா தான் என்கின்றனர். நடிகரின் குடும்ப மேட்டரையும் வெளியே கொண்டு வந்ததும் அவர்கள் தான் என்றும் மனைவியை நடிகருக்கு எதிராக அரசியல் களத்தில் இறக்க பெரிய டீலிங் போய்க் கொண்டிருப்பதாகவும் கூறுகின்றனர்.

நடிகர் அரசியலுக்கு சென்றதே மனைவிக்கு பிடிக்காத நிலையில், கண்டிப்பாக அவர் எல்லாம் இந்த ஆட்டத்தில் சிக்கவே மாட்டார் என்றும் கூறுகின்றனர். ஆனால், ஏற்கனவே பாஸ் நடிகரின் பார்ட்னரை உள்ளே கொண்டு வந்த அதே பாணியை கையிலெடுத்து காய் நகர்த்தி வருவதால் சர்ச்சை வெடித்துள்ளது.
மாஸ் நடிகருடன் இணையப் போகிறாரா?: பூ கட்சிக்கு குட் பை சொல்லி கிளம்பிய கோட் சீக்கிரமே மாஸ் நடிகர் கட்சியில் சேரப் போகிறாரா? அல்லது தனிக்கட்சி தொடங்கி தனது திறமையை நிரூபித்து மாஸ் நடிகருடன் இணையப் போகிறாரா? என்கிற பேச்சுக்கள் தான் ஹாட் டாப்பிக்காக சென்று வருகின்றன. இந்நிலையில், புதிய அரசியல் ஆட்டத்தை ஆட வேண்டும் என்பதற்காக பூவின் தலைகள் நடிகரின் மனைவியை அரங்கேற்றம் செய்ய அத்தனை வேலைகளையும் பார்ப்பதாக கூறுகின்றனர்.

மனைவியை வைத்து மடக்க திட்டம்: இத்தனை ஆண்டுகளாக இருந்த 2 பெரும் மலைகளையும் நடிகர் ஒற்றை ஆளாக தனது பக்கா மாஸை வைத்து ஊதித்தள்ளிய நிலையில், நடிகரின் வீக்னெஸ் பாயிண்ட்டை பிடித்தால் மட்டுமே அவரை மடக்க முடியும் என்பதால் ஹெவியான டீலிங் ஓடிக்கொண்டிருக்கிறது என்று ஷாக் கிளப்புகின்றனர். நடிகரின் மனைவி மட்டும் இந்த ஆட்டத்தில் உள்ளே வந்தால் அதன் பின்னர் மங்காத்தா தான் என்கின்றனர்.
நடிகையை எதிர்க்க: ஏற்கனவே பாஸ் நடிகரின் பார்ட்னரையும் இப்படித்தான் அந்த கட்சி கொண்டு வந்தது. மேலும், பல நடிகைகளை தங்களது கட்சியில் வைத்து மகளிர் அணி சங்கமாக நடத்தி வரும் நிலையில், நடிகரின் மனைவிக்கு ஆதரவு தெரிவிக்கும் தொனியில் சில சீனியர் கட்சி நடிகைகளே பேச ஆரம்பித்துள்ளதாக கூறுகின்றனர். குறிப்பாக நம்பர் நடிகையின் செயல்களை காலி செய்து அவருக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காக நீங்க வாங்க என்றும் கூறுகிறார்களாம். ஆனால், இப்போது வரைக்கும் நடிகரின் அரசியலே மனைவிக்கு பிடிக்காத நிலையில், அவர் வருவது 90 சதவீதம் டவுட்டு தான் என்கின்றனர். ஆனால், மீதம் உள்ள 10 சதவீத வாய்ப்பை தான் அந்த கட்சி பயன்படுத்த பக்காவாக வேலை பார்த்து வருகிறது என கிசுகிசுக்கள் தீயாய் பரவி வருகின்றன.


Click it and Unblock the Notifications