ஆபரேஷன் சக்சஸ்... பேஷண்ட் அவுட்... திணறும் தயாரிப்பாளர்!
Recommended Video

தீபாவளிக்கு வெளியாகி காவிக்கட்சி கொடுத்த பப்ளிசிட்டியால் ப்ளாக்பஸ்டர் எனப் பெயரெடுத்த படத்தின் தயாரிப்பாளருக்கு நஷ்டம் என்பதுதான் லேட்டஸ்ட் டாக். ஆனால் படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபமாம்.
பொதுவாக ஒரு படம் சரியாக ஓடாவிட்டால் அது வினியோகஸ்தர்களுக்குத்தான் நஷ்டத்தை ஏற்படுத்தும். பெரிய ஹீரோ படங்கள் என்றால் நல்ல லாபம் வைத்து விற்று விடுவார்கள் தயாரிப்பாளர்கள். ஆனால் இந்தப் பட விஷயத்தில் நடந்ததோ உல்டா என்கிறார்கள்.
இயக்குநரால் படத்தின் பட்ஜெட் திட்டமிட்டதை விட எகிறி விட்டது. பட்ஜெட்டை அடிப்படையாக வைத்து படத்துக்கு ரேட் வைத்தால் வாங்க ஆள் இல்லை. எனவே ஹீரோவின் முந்தைய பட வசூலின் அடிப்படையில்தான் விற்கப்பட்டதாம். எனவே தயாரிப்பாளரால் போட்ட பட்ஜெட்டை எடுக்க முடியவில்லை. ஆனால் காவிக்கட்சி ஏற்படுத்திய சர்ச்சையின் விளைவாக படம் ஓடியதால் குறைவான விலைக்கு வாங்கிய வினியோகஸ்தர்கள் பெத்த லாபம் பார்த்துவிட்டனராம்.
எல்லாவற்றுக்கும் காரணம் பட்ஜெட் எகிறியதுதான் என்று தயாரிப்பாளர் தயாரிப்பு நிர்வாகிகளை ஏறி இருக்கிறார். விரைவில் முக்கிய தலைகள் சில நிறுவனத்தை விட்டே வெளியேறலாம்.


Click it and Unblock the Notifications











