புதுசா கதை பண்ண வேண்டாம்.. பழைய படங்களை மிக்ஸ் செய்தால் போதும்.. தயாரிப்பு நிறுவனத்தின் தனி ரூட்!

By Staff

சென்னை: பெரிய தயாரிப்பு நிறுவனம் ஒன்று இயக்குநர்களுக்கு புது மாதிரியான கண்டிஷன் போட்டு படங்களை ஒப்பந்தம் செய்து வருவதாக பரபரப்பு பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

Recommended Video

Jailer Shooting ஆரம்பிச்சாச்சு, வெறித்தனமா காத்திருக்கும் ரசிகர்கள் *Kollywood

தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களை தயாரித்தால் போதும், அதை வைத்து எப்படி பிசினஸ் செய்வது என்பதை அந்த தயாரிப்பு நிறுவனம் நன்றாக அறிந்து வைத்துள்ளது.

அந்த தனி டிராக்கில் தான் பல டாப் நடிகர்களின் படங்களை அந்த தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து தயாரித்து வருகிறது.

 டாப் நடிகர்கள் கால்ஷீட்

டாப் நடிகர்கள் கால்ஷீட்

கோலிவுட்டின் முன்னணி நடிகர்கள் அனைவரது கால்ஷீட்டையும் மொத்தமாக குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கிறது அந்த பெரிய தயாரிப்பு நிறுவனம். பெரிய நடிகர்களின் படங்களை பார்க்கத்தான் ரசிகர்கள் தியேட்டருக்கு வருகின்றனர் என்பதை நன்றாக புரிந்து வைத்திருக்கும் அந்த நிறுவனம் தொடர்ந்து அவர்களது படங்களை வரிசையாக தயாரித்து பெத்த லாபம் பார்த்து வருகிறதாம்.

 சில சொதப்பல்கள்

சில சொதப்பல்கள்

படங்கள் சொதப்பினாலும், நடிகர்களின் ரசிகர்கள் எப்படியாவது படத்தை ஹிட் அடிக்க வைத்து விடுவார்கள் என்பதால், நடிகர்கள் கேட்கும் சம்பளத்தைக் கொடுத்து தயாரிப்புக்கான செலவில் அப்படியே கை வைத்து மேனேஜ் செய்து விடுகிறதாம் அந்த தயாரிப்பு நிறுவனம். இதன் காரணமாக சில சொதப்பல்கள் ஏற்பட்டாலும், முதலுக்கு மோசம் இல்லாமல் கல்லா கட்டுகிறது என்கின்றனர்.

எக்ஸ்ப்ரீமென்ட் வேண்டாம்

எக்ஸ்ப்ரீமென்ட் வேண்டாம்

விமர்சன ரீதியான அடி கூட தங்களது லாபத்தை பாதிக்கிறது என்பதால், புதிய கண்டிஷன் ஒன்றை தற்போது இயக்குநர்களுக்கு போட்டுத்தான் படங்களில் அவர்களை ஒப்பந்தமே செய்வதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அது என்னவென்றால், புதுசா கதை பண்றேன்னு எங்க காசுல நீங்க எந்தவொரு எக்ஸ்ப்ரீமென்ட்டும் பண்ண வேண்டாம் என்று சொல்லிவிட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

மிக்ஸிங் செய்தால் போதும்

மிக்ஸிங் செய்தால் போதும்

7 சுவரங்கள் தான் உள்ளது என்பது போல எல்லா கதையும் எடுத்து முடிச்சிட்டாங்க.. புதுசா எதையாவது எழுதுறேன், எடுக்கிறேன்னு நேரத்தையும் பணத்தையும் வீணடிக்க வேண்டாம். உலகளவிலோ, உள்ளூர் அளவிலோ ஏற்கனவே ஹிட் அடித்த படங்களில் இருந்து காட்சிகளை அப்படியே உருவி திரைக்கதை அமைத்து படமாக இயக்கிக் கொடுத்தால் போதும் என்கிற ஆர்டர் தான் கோடம்பாக்கத்தையே தற்போது அதிர வைத்துள்ளதாம்.

 சக்சஸ் அப்படித்தான்

சக்சஸ் அப்படித்தான்

சமீபத்தில் அந்த ஆர்டரின் பேரில் தயாரான அந்த படம் சக்சஸ் ஆக காரணமும் அதுதான் என்கின்றனர். இனிமேல், இப்படித்தான் அந்த தயாரிப்பில் இருந்து படங்கள் வரும் என்றும், அடுத்து உருவாக உள்ள உச்ச நட்சத்திரத்தின் படத்தின் கதையும் புதுசாக இருக்காது என்றும் ஏற்கனவே பார்த்த படங்களின் மிக்ஸிங்காகத்தான் இருக்கும் என்பதற்கு ஃபர்ஸ்ட் லுக்கே உதாரணமாக மாறி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X