மாஸ் நடிகரின் சம்பளத்தை விட அதிகம் கேட்கும் பிக் ஷாட்.. ஆத்தி.. நடிகருக்கு தலையே சுத்திடுச்சாம்?
சென்னை: கரியரின் உச்சத்தில் மாஸ் நடிகர் வாங்கிய சம்பளத்தை ஒரு பிக் ஷாட் கேட்டு டீலிங் பேசியதாக கிசுகிசுக்கள் கிளம்பி பலரையும் ஷாக் ஆக்கியுள்ளது. ஆரம்பத்திலேயே தன்னை இப்படி எல்லாம் செய்ய வைக்கிறாங்களேன்னு நடிகர் ரொம்பவே அதிர்ச்சி ஆகிவிட்டார் என்கின்றனர்.
நடிகர் கைகளில் துண்டை விரித்து அந்த பிக் ஷாட்டுக்கு வேண்டிய நபர் பிடித்த கையை பார்த்து நடிகருக்கு தலையே சுற்றி விட்டது என்கின்றனர். எப்படியாவது நினைத்ததை சாதிக்க வேண்டும் என்றால் இப்படியெல்லாம் டர்ட்டி பாலிடிக்ஸ் செய்தாக வேண்டும் என நடிகருக்கு கூட இருப்பவர்கள் அட்வைஸ் செய்ய அதெல்லாம் முடியவே முடியாது என சொல்லி அந்த நபரை துரத்தி விட்டுவிட்டார் என்கின்றனர்.

ஓரளவுக்கு ஆசைப்படலாம். ஆனால், ஓவரா பேராசை படக்கூடாது என அந்த நபர் மூலமாக பிக் ஷாட்டுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டார் நடிகர் என கிசுகிசுக்கள் புகைந்து வருகின்றன.
டீலிங்கோ டீலிங்: எல்லாமே மக்களுக்காகத்தான் என வாய் கிழிய பேசினாலும், உள்ளுக்குள் ஒவ்வொருத்தரும் பேராசை பெருமாள்களாகத்தான் இருக்கின்றனர் என்பதை மாஸ் நடிகர் ஆரம்பத்திலேயே புரிந்துக் கொண்டார் என்கின்றனர். ஓரளவுக்கு திருப்திப்படுத்தி தனது ஆசை கோட்டையை கட்ட பார்த்த நடிகருக்கு ஒவ்வொருத்தரும் கேட்கும் டீலிங் எல்லாம் அஸ்திவாரத்தையே ஆட்டம் காண வைத்துவிடும் அளவுக்கு இருக்கிறது என்கின்றனர்.

உங்க கடைசி சம்பளம் எவ்வளவு?: சிவாஜி படத்தில் உங்க புராஜெக்ட் வேல்யூ எவ்வளவு என ஒவ்வொரு அரசியல்வாதிகளாக ஆட்டையை போட பார்ப்பதை படத்தில் பார்த்திருப்போம். ஆனால், நிஜத்தில் அதை விட மோசமான அனுபவத்தை தற்போது மாஸ் நடிகர் சந்தித்து வருகிறாராம். செஞ்சுரி அடிச்சவனை விட ஒரு ரன், 2 ரன் எடுத்தவன் எல்லாம் போடுற ஆட்டத்தை பார்க்க முடியவில்லை என நினைத்தவருக்கு நீங்க கடைசியா வாங்குன படத்தோட சம்பளம் மட்டும் கொடுத்தீங்கனா டீலிங் அடுத்த நிமிஷமே டன் என சொல்ல நடிகருக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துவிட்டது என்கின்றனர்.
எதுவானாலும் ஓகே: எங்கே போய் முடிந்தாலும் முடியட்டும். கண்டிப்பா, நம்முடன் வரவில்லை என்றால் லாஸ் அவங்களுக்குத்தான் என்றும் வேற யாரும் அந்த இடத்தை நெருங்க முடியாது என்கிற கணக்கை கச்சிதமாக புரிந்துக் கொண்ட மாஸ் நடிகர் கொஞ்சம் வேணா கொடுக்கிறேன். மொத்தத்தையும் கேட்டா ஓடிப்போயிடு என சொல்லிவிட்டார் என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.


Click it and Unblock the Notifications