டிஜிட்டல் டீமுக்கு செம டோஸ் விட்ட பெரும் புள்ளி.. புதுசா பல கோடி செலவு செய்ய ரெடியாகிட்டாராம்?
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி எல்லாம் எப்படி பிஆர் வைத்து வேலை செய்து டைட்டிலை தட்டித் தூக்குகின்றனர். அதுபோலத்தான் இனிமேல் அரசியலும் நடக்கும் என பெரும்புள்ளி வாங்கிய பலத்த அடிக்குப் பிறகு நம்ப ஆரம்பித்து விட்டாராம்.
மக்களுக்கு தேவையானவற்றை கடைசி நேரத்தில் கொடுத்து கவனித்தால் போதும் வெற்றி கனியை ருசித்து விடலாம் என பழைய நம்பியார் டெக்னிக்கை பயன்படுத்தி பல்பு வாங்கியது தான் மிச்சம் என்கின்றனர்.

அதே நேரத்தில் மாஸ் நடிகர் வெற்றிப் பெற காரணமே அவர் டிஜிட்டல் டீமை சரியாக தேர்வு செய்து பார்த்த வேலை தான் என பெரும் புள்ளிக்கு அவரது தோல்வியை தழுவிய டீம் சொல்ல தற்போது அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துள்ளார் என்கின்றனர்.
சோலியை முடித்த மாஸ் நடிகர்: வாய்ச்சொல் வீரர்கள் வாள் வீச மாட்டார்கள் என்பது போல மணிக்கணக்கா எதிர் டீம் பேசினாலும் யாருமே கவனிக்கவில்லை. ஆனால், சைலன்ட்டாக பேச வேண்டியதை பேசி, பதிய வைக்க வேண்டிய விதத்தில் மக்களுக்கு பதிய வைத்து விட்டார் மாஸ் நடிகர். அதனால் தான் அவரது எதிர் டீமின் ஒட்டுமொத்த சோலியையும் முடித்து விட்டார் என்கின்றனர். ஆனால், இன்னமும் அவரை குறைத்து மதிப்பிட்டு வருவதே எதிர் டீம் சரியாக அவர் விரித்து இருக்கும் வலையில் விழக் காரணம் என்பதை புரிந்துக் கொள்ளாத வரை நடிகருக்கு மச்சம் தான் என்கின்றனர்.
தவளை தன் வாயால் கெடும்: தவளை எப்படி தன் வாயால் கெடுகிறதோ அதே போலத்தான் மாஸ் நடிகருக்கு எதுவும் தெரியவில்லை என பேசி பேசி எதிர் டீம் எக்ஸ்போஸ் ஆகி வருகிறது என்கின்றனர். ஒருவரை அடிக்க வேண்டிய இடத்தில் அடிக்காமல், சும்மா பேச்சுக்கு வாய் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் எப்போதுமே வெற்றிக் கனி எட்டாக்கனியாகி விடும் என்கின்றனர்.
பல கோடி செலவு: டிஜிட்டல் டீமை வைத்து தான் மாஸ் நடிகர் பெரிய வெற்றியை பெற்றுவிட்டார் என இன்னமும் தப்புக் கணக்குப் போட்டு அதற்கு மேலும், பல கோடியை செலவு செய்து பெரும்புள்ளி வருகிறார் என்றும் இதனால் ஒரு பயனும் இல்லை என்பதை சீக்கிரமே அவர் புரிந்துக் கொண்டு இந்த ஐடியாவை தூக்கிக் கொண்டு வந்த நபருக்கு செம அடி கொடுக்கப் போகிறார் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications