அந்த நடிகரை காலி பண்ண அதே ஃபார்முலா.. பெரும்புள்ளி போட்ட பக்கா ஸ்கெட்ச்.. மாஸ் நடிகர் டோட்டல் டேமேஜ்
சென்னை: மாஸ் நடிகரின் வளர்ச்சி அந்த பிரபல நடிகருக்கு மக்கள் மத்தியில் கிடைத்த செல்வாக்கை விட அதிகம் இருப்பதை பார்த்து மிரண்டு போய் தான் ஆரம்பத்திலேயே கிள்ளி மொத்தமாக எறிந்து விட வேண்டும் என பெரும்புள்ளி அடிமட்டத்துக்கு இறங்கி ஆப்பு அடித்துள்ளார் என்கின்றனர்.
ஒரு மேட்டரை மட்டும் வைத்து மாஸ் நடிகரை முடக்க முடியவில்லை என்பதால் அவரது வீக்னெஸ் பாயிண்ட்டை கையில் எடுத்து மரண அடி கொடுத்துள்ளனர் என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

ஏற்கனவே நடிகருக்கு ஏகப்பட்ட சிக்கல் உள்ள நிலையில், அவருக்கு எதிராக கூட இருந்துக் கொண்டே சிலர் எரிகிற வீட்டில் பிடுங்குறது மட்டும் லாபம் என டபுள் கேம் ஆடி நடிகரை முதுகில் குத்தியுள்ளனர் என்று பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.
தேரை இழுத்து தெருவில் விட்டு: ராஜா போல ஜாலியான வாழ்க்கையை வாழ்ந்து வந்த நடிகர் தனக்கு பிடித்த மாதிரி எல்லாம் சொகுசு வாழ்க்கை வந்து வந்த நிலையில், அவரை கூட இருந்தே உசுப்பேற்றி விட்டு சிலர் அவருக்குள் அதிகப்படியான ஆசையை வளர்த்து விட்டனர். ஆனால், கடைசியில் தேரை இழுத்து தெருவில் விட்டதை போல நடுரோட்டுக்கு கொண்டு வந்து விட்டு விட்டு பல சிக்கல்களில் பகிரங்கமாக சிக்க வைத்து விட்டார்கள் என்கின்றனர்.
மண்டையில மசாலா இல்லை: அடுத்தவர்களின் பேச்சைக் கேட்டு சாவி கொடுத்த பொம்மையாக சில வேலைகளில் நடிகர் ஈடுபட்டது தான் அவருக்கு தற்போது பெரிய இடியாக விழுந்துள்ளது என்றும் மண்டையில மசாலாவே இல்லை என்றும் அதெல்லாம் இருந்திருந்தால் எப்போவோ உஷாராகி தடுப்பு ஆட்டம் ஆடாமல் எதிர்ப்பு ஆட்டம் ஆடி இவர் ஆப்போசிட் டீமை இந்நேரம் கதிகலங்க விட்டிருக்க வேண்டும் என நெருங்கிய விசுவாசிகளே கூறி வருகின்றனர். ஏற்கனவே அந்த இயக்குநரையும் இதே போல ஒரு மேட்டரில் வைத்து மடக்கி தான் சைலண்ட் ஆக்கிவிட்டனர் என்கின்றனர்.
இவரை காப்பாற்றவே ஆள் வேண்டும்: இவர் வந்து காப்பாற்றுவார் என பலரும் நம்பிக் கொண்டிருக்க, இவரையே காப்பாற்ற ஆள் வேண்டும் என்கிற நிலைக்கு விஷயம் கை மீறி போன நிலையில், கூட இருக்கும் சிலரும் இன்னமும் காட்டிக் கொடுத்து பெரும் புள்ளியிடம் லைஃப் டைம் செட்டில்மெண்ட்டை வாங்கவும் பக்கா பிளான் நடப்பதாக கூறுகின்றனர். சூழ்ச்சியால் அந்த நடிகர் வீழ்ந்ததை போலவே இவரும் வீழ்ந்து விடுவாரா? அல்லது அனைத்தையும் சரி செய்து தனது கெத்தைக் காட்டுவாரா? என்பது விரைவில் தெரிந்து விடும்.


Click it and Unblock the Notifications











