மாஸ் நடிகருக்கு எதிராக பிரபலங்களை திரட்ட பெரும்புள்ளி பக்கா பிளான்.. பெண்டிங் எல்லாம் க்ளோஸ்!
சென்னை: திடீரென சினிமா பிரபலங்கள் அனைவரையும் தங்கள் பக்கம் ஈர்க்கும் வேலையை பெரும்புள்ளி திட்டமிட்டு செய்து வரக் காரணமே மாஸ் நடிகருக்கு யாரும் மறைமுகமாகவோ, நேரடியாகவோ எந்தவொரு ஆதரவும் கொடுத்து விடக் கூடாது என்பதற்காகத்தான் என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
நம்மிடம் என்ன என்ன குறைகள் உள்ளன. எதற்காக புதுசு புதுசா கிளம்பி நமக்கு ஆப்பு அடிக்கப் பார்கின்றனர் என்கிற ஆராய்ச்சியை அந்த நடிகர் உள்ளே என்ட்ரி கொடுத்ததும் பெரிய புள்ளி பக்காவாக ஆரம்பிக்க முடிவு செய்து விட்டாராம்.

அஸ்திவாரத்தை ஸ்ட்ராங்காக போட்டுள்ள நிலையில், மாஸ் நடிகர் அசைத்து பார்த்து விடக் கூடாது என்பதற்காக அவர் அஸ்திவாரத்தை போடுவதற்கு முன்பாகவே அதனை ஆட்டம் காண வைக்கும் அனைத்து முயற்சிகளும் அரங்கேறி வருவதாக பேச்சுக்கள் புகைந்து வருகின்றன.
பெண்டிங் பேலன்ஸ்: சினிமா பிரபலங்கள் முதல் சின்னத்திரை பிரபலங்கள் வரை யாருக்கும் நம் மீது எந்தவொரு கோபமும் இல்லாத வகையில், யாரெல்லாம் மாஸ் நடிகர் பக்கம் போகக் கூடிய சூழல் அதிகம் இருக்கிறதோ அதையெல்லாம் நோட் பண்ணி ஒரு லிஸ்ட்டை ரெடி பண்ணி அவர்களை எல்லாம் தங்கள் பக்கம் ஈர்க்கும் வேலையை பெரும் புள்ளி பார்த்துள்ளதாக கூறுகின்றனர். அனைத்து பெண்டிங் பேலன்ஸையும் க்ளோஸ் செய்தாலே நமக்கு சாதகமாக அவர்கள் மாறிவிடுவார்கள் என்றும் பக்காவாக பிளான் போட்டுள்ளதாக கூறுகின்றனர்.
நேரில் வரவழைத்து: மேலும், சினிமா பிரபலங்களை நேரில் அழைத்து அவர்களை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிக்க அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாகவும், மேலும், சில பார்ட்டிகளும், விழாக்களும் அடிக்கடி வைக்கவும் ஏகப்பட்ட பிளான்களை போட்டுள்ளார் என்று கூறுகின்றனர்.
மனக்கவலையில் மாஸ் நடிகர்: தனக்கு எதிராக தொடர்ந்து ஏகப்பட்ட யூகங்கள் வகுக்கப்பட்டு பொளக்கப்பட்டு வருகிறோமே என மாஸ் நடிகர் பெரிய மலையுடன் மோதி ஜெயிக்க என்ன செய்யலாம் என்று தெரியாமல் மனக்கவலையில் இருந்து வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. எப்படி இருந்தாலும், கடைசி வரை போட்டி மனப்பான்மையை விடக் கூடாது என்றும் எல்லாமே தனக்கு நல்ல பாடம் தான் என்றும் நம்மள நம்புறவங்க கண்டிப்பா நம்மள கை விட மாட்டாங்க என்கிற நம்பிக்கை அதிகமாகவே வளர்ந்து வருகிறது என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











