வெளி வேஷம் போடும் பெரும்புள்ளி.. உள்ளுக்குள்ள அவ்ளோ காண்டு.. மாஸ் நடிகர் கழுத்தை சுற்றும் கத்தி?
சென்னை: நேத்து முளைச்ச காளன் எல்லாம் நாற்காலியில் உட்கார ஆசைப்படலாமா என உச்ச நடிகர் உசுப்பி விட பெரும்புள்ளியும் அதை ஆமோதித்து அந்த நிலைப்பாட்டில் தான் நானும் இருக்கேன். ஆனால், வெளியே நம்மை பத்தி தப்பா பேசிடக் கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கேன் என பக்கா பாலிடிக்ஸ் செய்து வருகிறாராம்.
பெரும்புள்ளி ஒரு கண் அசைவை காட்டியிருந்தாலே இந்நேரம் மாஸ் நடிகர் தனது கனவை நனவாக்கியிருப்பார் என்றும் அவரது படத்தை எப்படி ரகசிய கூட்டு வைத்து முடக்கினாரோ அதே பாலிட்டிக்ஸை தான் இப்பவும் பெரும்புள்ளி செய்து வருகிறார் எனக் கூறுகின்றனர்.

இதனால், அவருக்கு என்ன லாபம் என்று பார்த்தால், எப்படியும் மாஸ் நடிகர் வந்துவிட்டால் அதன் பிறகு எப்போதுமே லாபம் கிடைக்குமா? என்பது சந்தேகம் தான் என்பதால் இப்போதைக்கு அதை தடுக்க முடிந்தளவுக்கு சதி நடப்பதாக கூறுகின்றனர்.
ஆரம்பத்துல இருந்தே ஏகப்பட்ட கத்தி: நடிகர் தனது புது ரூட்டை தேர்ந்தெடுத்து நம்ம பக்கம் கடையை திறந்துட்டானே என்கிற பொறமை பற்றிக் கொண்டதன் விளைவாக அவரை மடக்க ஏகப்பட்ட கத்திகளை பெரும்புள்ளி தரப்பு வீசி வந்ததாம். ஆனால், அனைத்து சவால்களையும் தனது முயற்சியாலும் பொறுமையாலும் வென்று மக்கள் ஆதரவுடன் இப்படியொரு இடத்தை வந்து அடைந்திருக்கிறார் மாஸ் நடிகர்.
வெளி வேஷம் போடும் பெரும்புள்ளி: எங்களுக்கு எந்த வருத்தமும் கிடையாது என்று வெளி வேஷம் சொல்லிவிட்டு, மறைமுகமாக நடிகரின் நாற்காலியை பறிக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனை வேலைகளையும் செய்து வருகிறார் என பிரபலம் ஒருவர் அவிழ்த்து விட்டுள்ள தகவல் தான் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது என்கின்றனர்.
உசுப்பி விட்ட உச்ச நடிகர்: பெரும்புள்ளியை இந்தளவுக்கு உசுப்பி விட்டதே உச்ச நடிகர் தான் என்றும் முதலில் நடிகர் சாதித்தது உச்சத்துக்கு பிடிக்கவில்லை என்றும் என்ன ஆனாலும், அவனை அந்த இடத்துக்கு போக விட்றாதீங்க என்பதை சொல்லவே நேரில் வந்து சந்தித்ததாக பிரபலம் ஒருவர் பகீர் தகவலை அவிழ்த்து வருகிறார். ஆனால், இது எந்தவொரு டீமாக இருந்தாலும் இப்படித்தான் ஆப்போசிட் டீமை காலி பண்ண பார்ப்பாங்க, உன்னால நான் கெட்டேன்.. என்னால நீ கெட்ட கதையாகத்தான் ஆகப்போகுது. என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே, இருட்டினில் நீதியும் மறையட்டுமேன்னு அப்பவே பாடிட்டாங்க என கோடம்பாக்கம் டி கடை பெஞ்ச்சில் சுடச்சுட பாலிடிக்ஸ் பஜ்ஜி காலியாகி வருகிறது.


Click it and Unblock the Notifications